பக்கம்:மதன கல்யாணி-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மதன கல்யாணி

அவள் எதையும் திறந்து கூடப்பாராமல், அப்படியே அடுப்பிற்குள் எறிந்து விடுவாள். அவளைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று பல சமஸ்தானாதிபதிகள் நினைத்தனர். ஆனால் அவள் எந்த இடத்தில் தங்குகிறாள் என்பதை ஈசுவரனும் காண முடியாமல் இருந்தது. அந்த நாடகத்தில் நடித்த பெண்களில் முக்கியமான சில நடிகைகள் மாத்திரம் தமக்கு விருப்பமான வேறிடங்களில் சுயேச்சையாக வசிக்கும்படி அனுமதிக்கப் பட்டிருந்தனர். மற்ற சிறுமியர் யாவரும் புரசைப்பாக்கத்தில் ஒரு தனியான பங்களாவில் நாடகத்தின் எஜமானனுடன் கூடவே அவனது பார்வையில் இருந்தனர். இந்த நாடகம் சென்னைக்கு வந்த பிறகு அவர்கள் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் தவறாமல் போனவர்களுள் துரைராஜாவும் மாரமங்கலம் மைனரும் முக்கிய மானவர்கள்.

கதைத் தொடக்கத்தில் இவ்விருவரும் சீட்டாட உட்கார்ந்தார்கள் அல்லவா? அப்போது கீழே கண்மணியம்மாள் வினையை மீட்டிப் பாடிய இன்னிசை மேலே எட்டியது. அதைக் கேட்ட மைனர் ஜெமீந்தார், “துரைராஜ் மோகனாங்கியின் பாட்டைக் கேட்ட காதுக்கு, இது எப்படி இருக்கிறது பார்த்தாயா? இது பாட்டாகவே இல்லை. ஒப்பாரி சொல்லி அழுவது போலிருக்கிறது” என்று கூறி நகைத்தான். தனது தங்கையின் பாட்டை மிகவும் இழிவாக மைனர் துஷித்ததைக் கேட்டும் துரைராஜா ஆயாசம் என்பதே கொள்ளாதவனாய் அதை ஆமோதிப்பவன் போலப் புன்னகை செய்த வண்ணம் சீட்டாட்டத்தைக் கவனித்தான். அதன் பிறகு இரண்டொரு நிமிஷ நேரம் இருவரும் மெளனமாக தங்களது வேலையைப் பார்த்தனர். திரும்பவும் மைனர் துரைராஜாவைப் பார்த்து, “நமது கண்மணிக்கு வீணை கற்றுக்கொடுக்கும் மதன கோபாலன் எவ்வளவு அழகாயிருக்கிறான், பார்த்தாயா? அவனுடைய ஜாதி என்னவென்று சொல்ல உன்னால் முடியுமா? எங்கே, உன் சாமர்த்தியத்தைப் பார்க்கலாம்” என்றான்.

துரைராஜா புன்னகை செய்து, “இப்படித்தான் என்னுடைய சாமர்த்தியத்தைப் பார்க்கிறதா? ஒரு பெண்பிள்ளையைக் காட்டி அவள் என்ன ஜாதி என்றால், பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/26&oldid=649750" இலிருந்து மீள்விக்கப்பட்டது