பக்கம்:மதன கல்யாணி-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மதன கல்யாணி

கடுமையாகப் பேசினேன். அவர் முற்றிலும் பைத்தியம் கொண்டவர் போலப் பிதற்றி, என்னை அணைத்துக் கொள்ளும் எண்ணங்கொண்டு, மோகவிகாரக் குறிகளோடு என்மேல் பாய, நான் கூச்சலிட்டு வேலைக்காரர்களை அழைக்க, அதற்குள் அவர் பயந்து கொண்டு, வெளயில் போனவர், “ஒகோ உயிரோடு உன்னை நான் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே; ஏதோ இரண்டு வேலைக்காரர்கள் இருப்பதைப் பற்றி நான் பயந்து விடுவேன் என்று நினைக்காதே. இன்றைய இரவு முடிவதற்குள் உண்டு இல்லை என்பது இரண்டில் ஒன்றை நான் அறிந்து விடுகிறேன். உன்னுடைய வேலைக்காரர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பதைப் பார்” என்று சொல்லி விட்டு வெளியில் போய்விட்டார். அதன் பிறகு என்னுடைய வேலைக்காரர்களை அழைத்து, அவருக்கு உதவியாக இருந்தவன் மேல் கோபித்து அவனைக் கண்டித்துவிட்டு, பங்களாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பிவிட்டு, அவர் எழுதிய பத்திரத்தை எடுத்துப் படித்துப் பார்த்தேன். அதில் மகா வேடிக்கை யான சங்கதிகள் பல இருந்தன. அவர் அப்படியும் செய்வாரா என்ற ஆச்சரியம் அடைந்தவளாய் நான் அந்தப் பத்திரத்தை பந்தோபஸ்தாக வைத்துவிட்டுக் கட்டிலில் படுத்துத் தூங்க ஆரம்பித்தேன்; உடனே திருடர்கள் வந்துவிட்டார்கள். கீழே இருந்த வேலைக்காரர்கள் பெருத்த கூக்குரல் செய்ய ஆரம்பித்து விட்டனர். நான் உடனே டெலிபோன் மூலமாக என்னுடைய நாடக எஜமானருக்குச் செய்தி அனுப்பினேன். திருடர்கள் அரை நாழிகை நேரம் வரையில் கீழே இருந்த அறைகளை எல்லாம் சோதனை செய்து விட்டு மேலே வந்து என்னுடைய ஆடை ஆபரணங்கள் முதலிய சொத்துக்களை எல்லாம் எடுத்து மூட்டை களாகக் கட்டினர்; வேறே சிலர் என்னுடைய வாயில் துணியை அடைத்து கைகால்களைக் கட்டி, என்னைத் தூக்கிக் கொண்டு போக முயன்றனர். அதற்குள் போலீஸாரும் நாடக எஜமானும் வந்துவிடவே, திருடர்கள் என்னை மாத்திரம் ஜன்னலின் கம்பியில் கட்டிவிட்டு, சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டனர். என்னுடைய வாயில் துணி அடைக்கப் பட்டிருந்த வேதனையாலும், கை கால்கள் கட்டப்பட்டதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/282&oldid=649799" இலிருந்து மீள்விக்கப்பட்டது