பக்கம்:மதன கல்யாணி-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - மதன கல்யாணி

விஷயத்தில் இவ்வளவு அதிகமான பிரியம் வைத்த பையன் இவ்வளவு கொடுமையான காரியத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டான் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம்; ஏனென்றால், பையனுடைய குணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு இப்பேர்ப்பட்ட கொள்ளைக்காரர்களுடைய பழக்கமே கிடையாது. பையன் இதில் சம்பந்தப்பட்டிருக்கவே மாட்டான் என்பதை நாங்கள் உனக்கு ஆயிரந்தரம் உறுதிப்படுத்திச் சொல்லக்கூடும்; அவன் செய்திருக்க மாட்டான் என்று உன் மனம் திருப்தி அடைவது தான் தரும நியாயமாகும்; அப்படித் திருப்தி அடையாமல் அவன்தான் செய்திருப்பான் என்ற சந்தேகம் இன்னமும் உன் மனதில் இருக்குமானால், நாங்கள் இவ்வளவு துரம் கேட்டுக் கொள்வதைக் கருதியாவது, நீ அவனுக்கும் எங்களுக்கும் மாணஹானி உண்டாகாமல் அவனைத் தப்புவித்து விடவேண்டியது உன்னுடைய பொறுப்பு; நீ அவனை தண்டனைக்குக் கொண்டு போவதில், உனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் ஒரு காசுகூட திரும்பி வரப்போகிற தில்லை. நீ அவனைத் தப்புவித்து விடுவதாக எங்களுக்கு வாக்குக் கொடுக்கும் பட்சத்தில், அந்த நஷ்டத்துக்கு ஈடாக, நீ எங்களிடம் நியாயத் துக்குப் பொதுவாக எவ்வளவு தொகை கேட்டதானாலும், அதை நாங்கள் இப்போதே கொடுத்து விடுகிறோம். நீ உண்மையில் மேலான குணமுடையவள் என்பதை இந்த விஷயத்தில் நீ அவசியம் காட்ட வேண்டும்” என்று மிகவும் உருக்கமாக மொழிந்தாள்.

அதைக் கேட்ட பாலாம்பாள் சிறிது யோசனை செய்தவளாய் “உங்கள் வீட்டுப் பிள்ளையின் மேல் நான் பகைமை பாராட்ட வில்லை. அவர் ஜெயிலுக்குப் போவதிலும், நீங்கள் மானஹானி அடைவதிலும், எனக்கு எவ்வித லாபமாவது பெருமையாவது உண்டாகப் போகிறதில்லை. இந்த விஷயத்தில் என்னால் ஆகக் கூடிய உதவி என்ன இருக்கிறது? அவர் வந்து கொள்ளை அடித்ததைக் கண்டதாக நான் பொய் சொல்லப் போகிறதில்லை. இப்போது நான் உங்களிடம் எந்த விவரத்தைச் சொன்னேனோ அதையே நான் வேறே எந்த இடத்திலும் சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/284&oldid=649803" இலிருந்து மீள்விக்கப்பட்டது