பக்கம்:மதன கல்யாணி-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 . மதன கல்யாணி

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று உணர்ந்தான்; எமனுலகம் சென்றிருந்த அவனது உயிர் தப்பியது. ஈசுவரனே தன்னைக் காப்பாற்றும் பொருட்டு அந்த இன்ஸ்பெக்டரை அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்து அவன் மிகவும் பரிதாபகரமான பார்வையாக அவரை நோக்கினான். அவரும் மைனரைப் பார்த்து, “யாரையா நீர்? இந்த அகாலத்தில் இங்கே என்ன செய்கிறீர்?” என்றார்.

அதைக் கேட்ட மைனர் மேலும் துணிவடைந்து, “நான் நேற்று சாயுங்காலம் ஆலந்துருக்குப் போய், அங்கே ஒரு வீட்டில் படுத்திருந்தேன். விடியற்காலம் ஐந்து மணிக்கே எழுந்து சைதாப் பேட்டைக்கு ஒர் அவசர காரியமாக வரவேண்டும் என்று படுத்துக் கொண்டேன். சற்று முன் விழித்துக் கொண்டு கடியாரத்தைப் பார்த்தேன். ஐந்து மணியாகி இருந்தது. உடனே புறப்பட்டு வந்து விட்டேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு இது நடு இரவென்பது தெரிந்தது. என்னுடைய கடியாரம் நேற்று சாயங்காலம் ஐந்து மணிக்கே நின்று போய்விட்டது என்பதை இப்போது தான் கண்டேன். இருளில் தனியாய்ப் போக பயமாக இருக்கிறது. நான் இருப்பது தேனாம்பேட்டை நான் மாரமங்கலம் மைனர் ஜெமீந்தார்” என்றான்.

அதைக் கேட்டவுடனே போலீஸ் இன்ஸ்பெக்டர், மைனரை ஏற இறங்கப் பார்த்து, “சரி; என் பின்னால் குதிரையின் மேல் உட்கார்ந்து கொள்ளும்; இதோ சமீபத்தில் அடையாற்றுப் பாலத் தண்டை என்னுடைய பங்களா இருக்கிறது. அதற்குள் நீர் சுகமாகப் படுத்திருந்து பொழுது விடிந்தவுடன் போகலாம்” என்றார். அதைக் கேட்ட மைனர் சந்தோஷமும் நன்றியறிதலும் பிரகாசித்த முகத்தோடு அருகில் நெருங்க, இன்ஸ்பெக்டர் ஒருபுறத்து அங்கவடியிலிருந்த தமது காலை எடுத்து, அதில் ம்ைனர் அவனது காலை வைத்தவுடன் கைகொடுத்துத் துக்க, அவன் அவருக்குப் பின்புறத்தில் உட்கார்ந்து கொண்டு தனது கைகளை முன்னால் நீட்டி அவரது இடுப்பைச் சுற்றிக் கட்டிப் பிடித்துக் கொண்டான். உடனே அவர் குதிரையைத் தட்டிவிட, அது நாற்கால் பாய்ச்சலில் விசையாக ஒடத் தொடங்கியது. குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/94&oldid=650027" இலிருந்து மீள்விக்கப்பட்டது