பக்கம்:மதன கல்யாணி-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105

மதனகோபாலன், “அவர்கள் உன் விஷயத்தில் சதாகாலமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; உன்னை உனக்கு விருப்பமான இடத்தில் கட்டிக்கொடுத்து, பெருத்த செல்வத்தோடு அமோகமாக உன்னை வைக்க வேண்டும் என்று அவர் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்; நீ இனிமேல், உன்னுடைய கலியான விஷயத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவும் வேண்டாம்; உயிரை விடவேண்டும் என்று நினைக்கவும் வேண்டாம்” என்றான்.

அதைக் கேட்ட கண்மணியம்மாள் சலிப்பாகப் பேசத்தொடங்கி, “நான் மகா துரதிர்ஷ்டசாலி என்பதை நான் பிறந்த காலத்திலிருந்தே தெரிந்து கொண்டிருக்கிறேன். யார் மனசு வைப்பதானாலும், என்னுடைய தலைவிதி மனசு வைக்க வேண்டாமா? எது எப்படி நடந்தாலும் சரி; நான் என்னைப்பற்றி அவ்வளவாக கவலைப்பட வில்லை; சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு என்பார்கள். என் தலைவிதிப்படி முடியட்டும். அது போகட்டும்; நேரமாகிறது; நான் குறித்த முக்கியமான விஷயத்தில் எது உண்மை என்பதை மாத்திரம் நீங்கள் சொல்லிவிடுங்கள்; நான் அவ்வள வோடு திருப்தி அடைந்து போய்விடுகிறேன்” என்றாள்.

அதைக் கேட்ட மதனகோபாலன் மிகுந்த கவலையோடு, “குழந்தாய்! நான் ஓரிடத்தில் தகாத காரியத்தைச் செய்ய எத்தனித்த தாக உன்னிடத்தில் சொன்னது யார்?” என்று கேட்க, கண்மணி யம்மாள், “நீங்கள் எவர்களிடத்தில் அப்படி நடந்து கொண்டீர்க ளாமோ, அவர்களே நேரில் வந்து அத்தையம்மாளிடத்தில் சொன்னார்கள்” என்றாள்.

மதனகோபாலன், “குழந்தாய்! இவ்வளவு காலமாக நான் உன்னோடு பழகுவதிலிருந்து, நீ என்னுடைய நடத்தையைப் பற்றியும், குணத்தைப் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொண்டிருப்பாய். நான் அப்படிப்பட்ட தவறான காரியத்தைச் செய்யக்கூடியவன் என்று உன் மனசு நினைக்குமா?” என்றான்.

கண்மணியம்மாள் துணிவும் மகிழ்ச்சியும் அடைந்து, “சரி: இப்போது என் மனம் உண்மையில் பூரிக்கிறது. என் மனசிலிருந்த சந்தேகமெல்லாம் விலகியது. இது என் காதில் விழுந்த போது, இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/109&oldid=645840" இலிருந்து மீள்விக்கப்பட்டது