பக்கம்:மதன கல்யாணி-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 123

19-வது அதிகாரம் பொறியிலகப்பட்ட எலி

அவ்வாறு வந்து நின்ற மோகனரங்கனது நிலைமை மிகவும் துன்பகரமாக இருந்தது; தனக்கும் துரைஸானியம்மாளுக்கும் கள்ள நட்பு ஏற்பட்டிருந்ததையும், தான் சிறிது நேரத்திற்கு முன் அந்த மடந்தையின் அந்தப்புரத்தில் தனியாக இருந்து வந்ததை யும், பிறர் எவரும் உணரவில்லை என்று அவன் உறுதியாக நினைத்து ஒருவாறு துணிவடைந்து, கல்யாணியம்மாளுக் கெதிரில் தோன்றி நின்றான். ஆனாலும், அவன் உண்மையில் பெருத்த குற்றம் புரிந்தவன் ஆதலால், அவனது மனம் அளவற்ற அச்சத்தினாலும் ஆவலினாலும் கலக்கமுற்றுப் படபடத்து நின்றது; அவனது கைகால்கள் எல்லாம் கட்டிலடங்காமல் நடுநடுங்கின. வாய் திறந்து பேசுவதற்கும் துணிவின்றி ம்ோகனரங்கன் உள்ளொன்றும் புறமொன்றுமாக இருந்த தனது நிலைமையைக் கண்டு கல்யாணியம்மாள் தங்களது ரகசியத்தை உணர்ந்து கொள்வாளோ என்ற பீதியினால் வதைக்கப்பட்டவனாகத் தத்தளித்து நின்றான். அவனைக் கண்ட கல்யாணியம்மாளது நிலைமையும் அவ்வாறே உள்ளொன்றும் புறமொன்றுமாக இருந்தது. தனது மூத்த புதல்வியின் கற்பை அழித்த துஷ்டனான மோகனரங்கனை உடனே பிடித்து கம்பத்தோடு சேர்த்து இறுக்கிக் கட்டி நன்றாக அடித்து அவனது இரண்டகத்திற்குத் தகுந்தபடி அவனைத் தண்டித்து, பங்களவை விட்டு ஒட்டிவிட வேண்டும் என்ற ஒரே கொடிய நினைவும் ஆத்திரமும் கல்யாணியம்மாளது மனதில் பொங்கி எழுந்து வீராவேசம் உண்டாக்கின. ஆனாலும், பணிப்பெண்களும் பிறரும் அந்த வெட்கக்கேட்டை உணர்வ தால், தங்களுக்கு இழிவு ஏற்படுமே என்ற நினைவினால், அந்த அம்மாள் பெரிதும் முயன்று தனது கோபாவேசத்தை எல்லாம் அடக்கித் தனது முகக்குறிப்புகளையும் மாற்றி மறைத்துக் கொண்டவளாய், அவர்களது ரகசியச் செய்கைகளைப் பற்றி தான் சிறிதும் சந்தேகங் கொள்ளாதவளைப் போல நடித்து, அதற்கு முன் அவனை எப்படி அன்போடு அழைப்பாளோ அப்படியே அழைத்து அவனிடத்தில் வசனிக்கத் தொடங்கினாள். அவர்களது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/127&oldid=645865" இலிருந்து மீள்விக்கப்பட்டது