பக்கம்:மதன கல்யாணி-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11

முதலில் ஒரு வேலைக்காரி சொன்னதையும், இரண்டொரு நிமிஷ நேரத்திற்குப் பிறகு, இன்னொரு வேலைக்காரன், அம்மாள் யாருடனோ சம்பாஷித்துக் கொண்டிருப்பது பற்றி, மறுபடி சொல்லி அனுப்பிய பிறகு வரலாம் என்று கூறியதையும் கேட்க, அவளது சந்தேகம் இன்னமும் பலமாக அதிகரித்துக் கொண்டே போனது. தனது அம்மாளிடத்தில், தமக்குத் தெரியாமல், ரகசிய மாகப் பேசக்கூடிய பெரிய மனிதர் யார் என்பதையும், அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் ஒருவகையான ஆசையும் ஆவலும் விலக்க இயலாவகையில் அவளது மனத்தில் எழுந்து அவளைத் துண்டியது. முதல் நாளிரவில், ஒளிந்திருந்து கேட்டதைப் போல, அப்போதும் தாங்கள் போய்க் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவளாய் துரைஸானியம்மாள், தனது தங்கையையும் அழைக்க, அவள் தனது இயற்கைப்படி அதைத் தடுக்க, அக்காள் தங்கையை வற்புறுத்தி அவளது கையைப் பிடித்து பலவந்தமாக இழுத்துக் கொண்டு குறுக்கு வழியாகச் சென்று, முதல் நாள் ஒளிந்திருந்த ஜன்னலை அடைந்தாள்.

அதன் பிறகு ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது. சற்று முன் வந்து போன வேலைக்காரன், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது கூட்டாளியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்து சேர்ந்தான். அவர் சுமார் ஐம்பது வயதடைந்தவராகக் காணப்பட்டார். அவர் தீrை வளர்த்திருந்தமையால், சிரத்திலும் முகத்திலும் உரோமம் அடர்ந்து மூடிக் கொண்டிருந்தது. அவரது கண்களும், கன்னங் களிலும் காதுகளிலும் சில பாகங்களுமே வெளியில் தெரிந்தன. ஆனால் அவர் விலையுயர்ந்த ஜரிகைத் தலைப்பாகை, நாகரிகமான சட்டை, வெள்ளை வெனேரென்று சலவை செய்யப்பட்ட வஸ்திரங்கள், வைரக்கடுக்கன்கள், மோதிரங்கள், தங்கச்சங்கிலி கடிகாரம், தங்க மூக்குக் கண்ணாடி முதலியவற்றை அணிந்து, கையில் தங்கப்பூண் கட்டப்பட்ட கருங்காலித்தடி பிடித்து நொண்டியைப் போல உந்தி உந்தி நடந்து, கல்யாணியம்மாள் இருந்த இடத்திற்கருகில் வந்து சேர்ந்தார். அவரது அபாரமான தாடி மீசைகளையும் நொண்டிய நடையையும் காணவே, கல்யாணி யம்மாள் நகைக்கும்படியான நிலைமையை அடைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/15&oldid=645899" இலிருந்து மீள்விக்கப்பட்டது