பக்கம்:மதன கல்யாணி-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #5:

இனங்காத பதிவிரதிையும் உண்டா? இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த பசவண்ண செட்டியாருடைய சிநேகம் ஏற்பட்டதும், என்னுடைய நல்ல அதிர்ஷ்டத்தையே காட்டுகிறதென்பதற்குச் சந்தேகமே இல்லை. நாளைக்கு இவர் வரட்டும் பேசிக்கொள் கிறேன்” என்று தனக்குள்ளாகவே பலவாறு நினைத்து மனக் கோட்டை கட்டிக்கொண்டு பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தான்.


21-வது அதிகாரம் காதற்கிளியின் கடித விநோதம்

கில்யாணியம்மாள் மோகனரங்கனிடத்தில் கடிதத்தைக் கொடுத்து மைலாப்பூருக்கு அனுப்பிய பிறகு, தனது வேலைக் காரியை வெளியில் போயிருக்கச் சொல்லிவிட்டு ஒய்ந்து, “அப்பாடா” என்று தனது தலையணைகளில் சாய்ந்து சயனித்துக் கொண்டாள். அவளது மனதும் தேகமும் அவளைப் பெரிதும் வதைத்துக் கொண்டே இருந்தன. அவளுக்கு ஏற்பட்ட அத்தனை துன்பங்களுக்கும் இடையில் அவளது மனதில் இன்னொரு புதிய கவலையே யாவற்றிலும் வலுவாக எழுந்து அவளை வருத்தத் தொடங்கியது; தனது மூத்த குமாரி, எல்லா விஷயங்களையும், இளைய குமாரியான கோமளவல்லியிடத்தில் வெளியிட்டிருப் பதைப் போல, அவளுக்கும் மோகனரங்கனுக்கும் ஏற்பட்டுள்ள திருட்டு நட்பைப்பற்றியும், அவள் தங்கையிடத்தில் வெளியிட் டிருப்பாளாகில், மகா பரிசுத்தமான நடத்தையும், உயர்வான குணமும் வாய்ந்தவளான கோமளவல்லியும் ஒருகால் துண்மார்க் கத்தில் இறங்கி அக்காளைப் போலக் கெட்டுப் போய்விடுவாளோ என்ற கவலையே பெருத்த கவலையாக எழுந்து கல்யாணியம் மாளை வதைக்கத் தொடங்கியது. பெண்கள் இருவரையும் தனியான அந்தப்புரங்களில் வைத்து, இடைவிடாமல் தனது நாட்டத்தை அவர்களின் மேல் செலுத்தாமல் இருந்ததனால், அப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டதென்று நினைத்த கல்யாணி யம்மாள், இனிமேல் அவர்களை அதிசீக்கிரத்தில் கலியாணம் செய்து கொடுக்கும் வரையில், அவர்களையும் தனது அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/155&oldid=645908" இலிருந்து மீள்விக்கப்பட்டது