பக்கம்:மதன கல்யாணி-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 175

பாதைக்கருகில் இருந்த கடைகளுக்குப் பக்கத்தில், ஒரு ஜெவான் நிற்கக் கண்டு அவனிடத்தில் நெருங்கி, “ஐயா! இந்த ஊர் ஸ்டேஷனில், சுந்தரம் பிள்ளை என்று ஒரு ஹெட்கான்ஸ்டேபில் இருந்தாரே; அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியுமா?” என்று நயமாகக் கேட்க, அந்த ஜெவான் உடனே திரும்பி மோகனரங்கனை ஏற இறங்கப் பார்த்து, “நீ யாரையா? சந்தரம் பிள்ளையைப் பற்றி நீர் ஏன் கேட்கிறீர்?” என்று மிகவும் கம்பீரமாக வினவ, அதைக் கேட்ட மோகனரங்கன், “நான் அவருடைய மைத்துனன். அவர் இந்த ஊர் ஸ்டேஷனில் இப்போது வேலையாக இருக்கிறாரா என்பதும், அவர் இன்னமும் அடையாற்றில் தான் இருக்கிறாரா என்பதும் தெரியவேண்டும். நான் அவருடைய இருப்பிடத்துக்குப் போக வேண்டும்” என்றான்.

உடனே அந்த ஜெவான், “அவருக்கு வேலை போய் ஒரு வருஷத்துக்கு மேலாகிவிட்டது. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது” என்றான்.

மோகனரங்கன் சிறிது நேரம் யோசனை செய்து, “அவர் மேலதி காரிக்கு அப்பில் செய்தாரே; அது முடிவுக்கு வந்து விட்டதா?” என்றான்.

ஜெவான், “அதையெல்லாம் தள்ளிவிட்டார்கள்” என்றான்.

அதைக் கேட்ட மோகனரங்கனது முகம் மிகுந்த விசனத்தினால் மாறுபட்டது. அவன் சிறிது நேரம் தயங்கி நின்றவனாய், “சரி அவர் எங்கே இருக்கிறார் என்பது அடையாற்றுக்குப் போனால் தான் தெரியும். போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே நடக்கலானான். அவனது மனதில், தன் சொந்த விசனத்தோடு தனது அக்காளின் விசனமும் ஒன்றுகூடி அவனை வருத்தத் தொடங்கியது. தனது அத்த்ானும் அக்காளும் வருமானம் இல்லாமல் துன்புற்றிருக்கும் சமயத்தில், தான் சம்பாத்தியம் செய்து அவர்களது கொடுமையை விலக்குவது விட்டு, தானும் அங்கே போய் அவர்களை அதிகரித்த சுமைக்கு ஆளாக்க நேரிட்டிருப்பதை நினைத்து நினைத்து, மிகுந்த கிலேசமும் துயரமும் அடைந்தவனாய், அவன் ராஜபாட்டையின் வழியாக

மி.க.!!-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/179&oldid=645952" இலிருந்து மீள்விக்கப்பட்டது