பக்கம்:மதன கல்யாணி-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மதன கல்யாணி

நடந்து கொண்டே அடையாற்றை நோக்கிச் சென்றான். அவன் சைதாப் பேட்டைக்கு அப்பால் சுமார் இரண்டு மயில் தூரம் போயிருப்பான்; அவனுக்கு எதிர்த்திக்கிலிருந்து மூன்று குதிரை வண்டிகள் விசையாக வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த வண்டியில் பெட்டிகள், படுக்கைகள், பாத்திரங்கள், கட்டில்கள், மேஜை நாற்காலிகள் முதலிய குடும்ப சாமான்கள் கூண்டு வரையில் திணக்கப்பட்டிருந்தன. பின்னால் வந்த மூன்றாவது வண்டியில், வண்டிக்காரனைத் தவிர வேறு இருவர் உட்கார்ந் திருந்தனர். அவர்கள் துருக்க ஜாதியைச் சேர்ந்தவராகவும் புருஷன் பெண் ஜாதிகளைப் போலவும் காணப்பட்டனர். அந்தப் புருஷனுக்கு சுமார் 30-வயதிருக்கும்; கைலி (லுங்கி), சட்டை தலைப்பாகை, பட்டு உருமாலை, தாடி, மீசை, கண்களில் மை, அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, வாயில் வெற்றிலை பாக்கு முதலிய சின்னங்களோடு ஒரு பெரிய தனிகரைப் போலக் காணப்பட்டார். அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்பாவை சுமார் இருபது வயதான சிறுமி போலவும் உருட்சி திரட்சியான கைகால்கள் முதலிய அங்கங்களையும் சதைப்பிடிப்பான மேனியையும் பெற்றவள் போலவும் காணப்பட்டாள். ஆனால், அவள் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரு அங்கியால் அவளது தேகத்தை முற்றிலும் மறைத்துக் கொண்டு, மூகத்தில் விடப்பட்ட இரண்டு துளைகளின் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டிருந்தமையால், அவளது அழகு, உடம்பின் நிறம் முதலிய மற்ற அம்சங்கள் விவரமாக அறியக்கூடாமல் இருந்தன. மேலே குறித்த வயது முதலிய விவரங்கள் ஒர் உத்தேசத்தின் மேல் யூகிக்ககூடியனவாக இருந்தன.

மோகனரங்கன் அந்த வண்டிகளைச் சந்தித்த இடம் நிருமானுஷ் யமானது; அவ்விடத்தில் வேறு மனிதராகிலும் வண்டிகளாகிலும் காணப்படவில்லை. முதலில் சாமான்கள் நிறைந்த வண்டிகளை யும், பிறகு மனிதர் இருந்த வண்டியையும் கண்ட மோகனரங்கன் யாரோ துருக்கர்கள் தமது வீட்டைக் காலி செய்து கொண்டு, வேறிடத்திற்குப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால், கடைசி வண்டி தனக்கருகில் வந்து தன்னைத் தாண்டிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/180&oldid=645956" இலிருந்து மீள்விக்கப்பட்டது