பக்கம்:மதன கல்யாணி-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 மதன கல்யாணி

நோக்கி, “எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. நான் ஒரு வருஷத்

துக்கு முன் அடையாற்றுக்கு வந்திருக்கிறேன்” என்றான். முஸ்ல்மான், “யாருடைய வீட்டுக்கு வந்தீர்?” என்றார். மோகனரங்கன், “ஹெட்கான்ஸ்டேபில் சுந்தரம் பிள்ளையின்

வீட்டுக்கு வந்திருக்கிறேன். நான் அவருடைய மைத்துனன்”

என்றான்.

அதைக் கேட்ட முஸல்மான் மிகுந்த சந்தோஷத்தோடு, “ஓ! அப்படிச் சொல்லும் நான் அந்த சுந்தரம் பிள்ளை. இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவனல்லவா? நான் அவருடைய வீட்டில் வந்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பது வழக்கம். நீர் வந்திருந்த போது உம்மை நான் பல தடவைகளில் பார்த்துப் பேசி இருக்கிறேன். நீர் மறந்துவிட்டீர் போலிருக்கிறது” என்றார்.

உடனே மோகனரங்கன் சிறிது நினைத்துப் பார்த்து, “ஒகோ! அப்படியா இருக்கலாம்; இருக்கலாம்; எனக்கு இன்னம் ஞாபகம் சரியாக ஏற்படவில்லை. என்னுடைய அக்காளும், அத்தானும் செளக்கியமாக இருக்கிறார்களா? அவர்கள் இப்போதும் அதே வீட்டில்தானே இருக்கிறார்கள்? அவர்கள் செய்திருந்த அப்பீல் கூடத் தள்ளுபடி ஆகிவிட்டதென்று கேள்விப்பட்டேன். அவர்கள் இப்போது ஜீவனத்துக்கு என்ன செய்கிறார்கள்?’ என்று பற்பல கேள்விகளைக் கேட்க, உடனே அந்த முஸ்ல்மான் சிறிது விசனித்த முகத்தோடு அவனை நோக்கி, “ஒகோ! உமக்கு நெடுநாளைய விவரம் தெரியாது போலிருக்கிறது. ஆனால், இப்போது நீர் அவர்களுடைய வீட்டுக்குத்தான் போகிறீர் போலிருக்கிறது. நான் உம்மைக் கூப்பிட்டது நல்லதாகப் போய்விட்டது” என்றார்.

அந்தப் பீடிகையைக் கேட்ட உடனே மோகனரங்கனது அடிவயிற்றில் சுருக்கென்று கத்தி பாய்வது போன்ற ஒரு வேதனையும் சஞ்சலமும் உண்டாயின. அவர்களுக்கு இன்னமும் எவ்விதமான விபத்து நேரிட்டதோ என்றும், அவர்கள் எந்த ஊருக்குப் போய்விட்டார்களோ என்றும் நினைத்து விவரிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/182&oldid=645959" இலிருந்து மீள்விக்கப்பட்டது