பக்கம்:மதன கல்யாணி-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17

தேக அசெளக்கியத்தைப் பற்றிப் பரிதபித்து, சோபாவில் உட்காரும்படி உபசரித்து, காப்பி குடித்துவிட்டு அரை நாழிகை நேரமாவது தன்னோடு பேசியிருந்து விட்டுப் போகாவிட்டால், அவனை விடுகிறதில்லை என்று சொல்லி, கையைப் பிடித்திழுத்து சோபாவில் உட்கார வைத்து, கண்மணி என்றழைத்து, காமவெறி கொண்டு மானம் வெட்கம் முதலியவற்றை எல்லாம் காற்றில் துற்றிவிட்டு, தன்னைக் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டுப் போக வேண்டும், இல்லாவிட்டால் இப்போதே தன்னுடைய உயிர் போய்விடும் என்றும் சொல்லி, அவன் மேல் பாய்ந்து அணைத்துக் கொள்ள முயல, அவன், அதற்கு இணங்காமல் ஒட, சீமாட்டியம்மாள் விடாமல் துறத்த, அதற்குள் பின்னால் யாரோ மனிதர் வர, பையன் தப்பி ஓடிவிடுகிறான்; இதை என்னவென்று சொல்லுகிறது? இதை நீங்கள் அந்தப் பையனுடைய குற்றமென்றே சொல்லுவீர்கள். அதுவும் உண்மை தான். ஏனென்றால் இத்தனை வருஷங்களாக புருஷ சுகத்தை வெறுத்து அதில் விரக்தி கொண்டிருந்த விதவைகள்கூட மயங்கி தலைகால் தெரியாமல் தங்களுடைய மானத்தையும் கற்பையும் இழக்கும்படியாகச் செய்யத்தக்க, அவ்வளவு அழகும் உத்தம லட்சணங்களும் அவனிடத்திலிருந்தது எவ்வளவு பெரிய குற்றம் பார்த்தீர்களா? அது கொஞ்சமும் மன்னிக்கத்தக்க குற்றமா! ஏன் சும்மா நிற்கிறீர்களே! நீங்கள் தான் சொல்லுங்கள் அம்மணி” என்று கூறிய வண்ணம் சொல்லம்புகளைச் சரமாரியாக அவளது செவிகளிலும் இருதயத்திலும் சொருகிய வண்ணம், அவளது வதனத்தை ஒரே முறைப்பாகப் பார்க்க, கல்யாணியம்மாளது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்வதே நல்லதாகும். சகிக்க ஒண்ணாத அவமானத்தினாலும் கோபத்தி னாலும் அவளது தேகம் இருந்ததோ அல்லது கரைந்தோ புகைந்தோ காணாமல் போய்விட்டதோ என்று நினைக்கும்படி ஆகிவிட்டது. அவள் தனக்கொரு தேகம் இருக்கிறதென்பதையே உணரவில்லை. அது ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது; மூளை விற்றென்று சுழன்றது; அறிவு பிறழ்ந்தது; வியர்வை குபிரென்று மயிர்க்காலுக்கு மயிர்க்கால் வெளிப்பட்டு, பனிக் காலத்தில் காலையில் மரங்கள் சொரியும் பனித்திவலைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/21&oldid=646013" இலிருந்து மீள்விக்கப்பட்டது