பக்கம்:மதன கல்யாணி-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மதன கல்யாணி

அவளை விட்டுப் பிரிந்து ஒர் இமைப்பொழுதும் இருக்க முடிய வில்லை; இனி நான் வாழ்ந்தாலும் இவளை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டு தான் வாழ்வது. இறந்தாலும், இவளுடைய மடியின் மேல் தலையை வைத்தே உயிரை விடுவேன். இவள் அவ்வளவு தூரம் என் ஆசையையும் உயிரையும் கொள்ளை கொண்டு விட்டாள்.

இது நிற்க, நேற்று காலையில் நான் இங்கே வருவதற்கு முன் என்னுடைய அம்மாளிடத்தில் பேசிக் கொண்டிருந்து பணம் வாங்கிக் கொண்டு வந்தேன். நான் பாலாம்பாளுக்கு எழுதிக் கொடுத்திருக்கிற பத்திரத்தை அவளுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்துவிடவும், பாலாம்பாளுடைய நட்பை இவ்வள வோடு நிறுத்திக் கொள்ளவும் அவர்கள் என்னிடத்தில் சொன்னார் கள். நான் அதற்கு இணங்காமல் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து கொடுத்து விடுவேன் என்று பயமுறுத்தினேன். அவர்கள் உடனே படிமானத்திற்கு வந்ததன்றி, பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம் என்றும் என் மனம் திருப்தியடையும் வரையில் இப்போது இருப்பது போலவே அவளிடத்தில் நட்பாக இருந்து வரலாம் என்றும் சொன்னார்கள். அவர்கள் மனப்பூர்வமாக என்ற சந்தேகம் என் மனசில் இருந்து வந்தது. இன்று காலையில் எனக்குத் தேனாம்பேட்டையில் இருந்து கிடைத்திருப்பதைப் பார்க்க, அவர்கள் கபட்டுத்தனமாகவே அவ்வாறு பேசினார்கள் என்பது நிச்சயமாகிவிட்டது. நான் நேற்று அங்கே இருந்து வந்த உடனே அவர்கள் என்ன் செய்தார்களாம்; அம்மாளுடைய துர்மந்திரியான பொன்னம்மாளை ஆலந்துருக்கு அனுப்பினார்க ளாம்; அம்பட்டக் கருப்பாயியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்களாம்; இன்றைய இரவுக்குள், அவளாவது கட்டை யன் குறவனாவது வந்து பாலாம்பாளுடைய பங்களாவுக்குள் நுழைந்து, அந்தப் பத்திரத்தை அபகரித்துக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் என்று அவளிடத்தில் முடிவுகட்டி, அதற்காக ஏராளமான பணம் கொடுத்தார்களாம்; என்னுடைய தாயார் என் விஷயத்தில் இப்படிப்பட்ட இரண்டகம் செய்திருப் பதைக் கேட்க என் மனம் பதறுகிறது; என் உடம்பு துடிக்கிறது: நல்ல வேளையாக, இந்த விஷயம் சரியான காலத்தில் எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/216&oldid=646024" இலிருந்து மீள்விக்கப்பட்டது