பக்கம்:மதன கல்யாணி-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215

என்றும் சொன்னேன். அவள் அதற்கு முழு மனதோடு சம்மதித்து விட்டாள். ஆகையால் நீ எந்த நேரத்திலும், இங்கே வந்து எங்களோடு சந்தோஷமாக இருந்து விட்டுப் போகலாம். நான் இந்த இடத்தைவிட்டு, உன்னுடைய பங்களாவுக்கு முன் போல அடிக்கடி வர செளகரியப்படாது. ஆகையால் நீதான் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். மோகனாங்கி எங்கே இருக்கிறாள் என்ற விஷயத்தை நான் இப்போது பாலாம்பாளிடத் தில் கேட்டால், இவள் என்மேல் ஏதாவது சந்தேகம் கொண்டு விடுவாளோ என்கிற பயம் என் மனதிலிருக்கிற தாகையால், நான் இவளிடத்தில் அதைப்பற்றிக் கேட்கத் தயங்குகிறேன். நீ இங்கே வந்து இரண்டொரு நாள் பழகிய பிறகு அந்த விபரம் உனக்குத் தேவை என்று சொல்லி, அவளிடத்திலிருந்து உண்மையை சுலபத்தில் கிரகித்துவிடலாம்; ஆகையால் அந்த விஷயத்தில் உனக்கு இனி

எவ்விதமான கவலையும் வேண்டியதில்லை. .

வேறே விசேஷம் ஒன்றுமில்லை.

இங்ஙனம் ஆருயிர் நண்பன்,

மாரமங்கலம்-துரை.

-என்று எழுதப்பட்டிருந்த நீண்ட கடிதத்தை, துரைராஜா மிகவும் தெளிவாக வாசித்துக் காட்டினான்.

கல்யாணியம்மாளோ அதுகாறும் மிகுந்த பொறுமையோடும், கரைகடந்த வியப்போடும், அதன் சங்கதிகளைக் கேட்டுக் கொண்டிருந்தவளாகத் தோன்றினாலும், அந்த அம்மாளது மனத்தை வதைத்த துன்பங்களும், உணர்ச்சிகளும், மாறுபாடு களும் விவரிக்க இயலாதனவாகவும், பரம சங்கடமானவைகளாக வும் இருந்தன. முதல் நாள் தான் பொன்னம்மாளை ஆலந்துருக்கு அனுப்பியது முதல் கருப்பாயிக்குப் பணம் கொடுத்து, பத்திரத் தைக் கொண்டு வரச் சொன்னது வரையில் உள்ளவையும், மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டவையுமான காரியங்கள் எல்லாம் மைனருக்கு எட்டியிருந்ததைக் கேட்கவே, கல்யாணியம்மாளது சரீரம் கிடுகிடென்று ஆடிப் போய்விட்டது. மனம் என்ன செய்வ தென்பதை அறியமாட்டாமல் தத்தளித்தது. அந்த விஷயத்தை மைனரிடத்தில் யார் வெளியிட்டிருப்பார்கள் என்ற சந்தேகமே பெரிதாக எழுந்து வதைத்தது. ஒருகால் பொன்னம்மாளே தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/219&oldid=646030" இலிருந்து மீள்விக்கப்பட்டது