பக்கம்:மதன கல்யாணி-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 269

ஆசனத்தை விட்டெழுந்து, பின்புற வாசலின் வழியாக வெளியே சென்று, துரைஸானியம்மாளது அந்தப்புரத்திற்கருகில் போய்ச் சேர்ந்தாள்.

போனவள் திடீரென்று உள்ளே நுழையாமல், தயங்கி வெளியி லேயே நின்றாள். துரைஸானியம்மாள் தனது மூத்த பெண் குழந்தையாயிற்றே என்ற கரைகடந்த வாத்சல்யத்தினாலும், அவளும் தோற்றத்தில் தன்னைப் போலவே இருக்கிறாள் என்ற நினைவினாலும், அவளிடத்தில் அளவிலடங்காத அபிமானமும் வாஞ்சையும் வைத்திருந்த கல்யாணியம்மாள் பெரும் பாடுபட்டு அருமையாக ஊட்டி வளர்த்து மனுவியாக்கப்பட்ட தனது சீமந்த புத்திரி, அப்படிப்பட்ட இழிவான நடத்தையில் இறங்கிவிட்டாளே என்ற ஏக்கத்தினாலும் துயரத்தினாலும் தளர்வடைந்தவளாய், அவளை எப்படிக் கண்டிக்கிறது என்ற கிலேசம் அடைந்தவளாய், உள்ளே போகாமல் வெளியிலேயே நின்றாள்; அன்றைய காலையிலும் முந்திய நாளிலும் தான் போய்ப் பார்த்த காலத்தில் துரைஸானியம்மாள் தனது தாயை இலட்சியமே செய்யாமல் அசட்டையாகப் படுத்து வேறொரு புறத்தில் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க, கல்யாணியம்மாள் அதைப் பாராட்டா மல் கோமளவல்லியிடத்திலும் தாதிகளிடத்திலும் பேசிக் கொண் டிருந்துவிட்டு வர நேர்ந்ததாகையால், தான் மறுபடியும் உள்ளே போவதில் எவ்வித உபயோகமுமில்லை எனத் தோன்றியது. அப்போது தாதிகள் பெண்கள் இருவரையும் வைத்துவிட்டுத் தங்களது காலைப் போஜனத்தை முடித்துக் கொண்டு வரப் போயிருந்தமையால், பெண்கள் இருவரும் தனியாக இருந்ததும் தெரிந்தது; ஆகவே, கல்யாணியம்மாள் மெல்ல நடந்து, ஒரு ஜன்னலண்டை போய், ஓசை செய்யாமல் நின்று கொண்டிருந் தாள். அந்த ஜன்னலை அடுத்தாற் போல உட்புறத்தில், துரை லானியம்மாளது கட்டில் போடப்பட்டிருந்த தாகையால், உட்புறத்தில் பேசப்படும் வார்த்தைகள் அந்த ஜன்னலுக்கு வெளியில் நன்றாகக் கேட்டன. கல்யாணியம்மாள் தனது செவியைக் கம்பிகளுக்கிடையில் வைத்து கவனமாகக் கேட்கத் தொடங்கினாள் உட்புறத்தில் அக்காளும் தங்கையும் மாத்திரம் தனியாக இருந்து மெதுவாகப் பேசியது நன்றாகத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/273&oldid=646137" இலிருந்து மீள்விக்கப்பட்டது