பக்கம்:மதன கல்யாணி-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25

மனிதனை நினைத்து அப்போதே பெருமூச்சுவிடத் தொடங்கினாள். தான் எப்பாடு பட்டாகிலும் அன்றிரவிற்குள் அந்த மனிதனுடைய கள்ள நட்பை அடைந்தே தீர வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டதன்றி, மகா பரிசுத்தமான எண்ணமும் நடத்தையும் உடையவளான கோமளவல்லியின் மனதையும் கலைத்து அவளையும் துன்மார்க்கத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவையும் செய்து கொண்டாள்.

ஆனால் கோமளவல்லியோ, தனது தாய் மகா சுத்தமானவள் என்ற நினைவை உறுதியாகக் கொண்டிருந்தவள் ஆதலால், பசவண்ண செட்டியார் சொன்னது முழுதும் கட்டுப்பாடான பொய்யென்றும், மதனகோபாலன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, குற்றத்தை எல்லாம் தனது தாயின் மீது சுமத்தி இருக்கிறான் என்றும் நினைத்து, பொல்லாத வேளையின் பயனாக தனது தாய்க்கு அப்படிப்பட்ட இழிவும் அவமானமும் ஏற்பட்டுவிட்டதே என்று பரம சங்கடம் அடைந்து சகிக்க இயலாத துயரத்தில் ஆழ்ந்ததன்றி, தான் உடனே போய், தனது தாய்க்கு ஆறுதல் கூறி அவளது விசனத்தை விலக்க வேண்டும் என்றும் நினைத்தாள். ஆனால், தனது தாயின் அனுமதியின்றி தாங்கள் ஒளிந்து கொண்டதை எவ்வாறு வெளியிடுவது என்ற கவலை கொண்டவளாய் மிகவும் சஞ்சலமுற்றிருந்தான். *

வாசகர்களே ஒரே வயிற்றில் ஜனித்து, ஒன்றாகவே இருந்து இத்தனை வருஷ காலம் வளர்ந்து வந்தவர்களான இவ்விரண்டு மடந்தையரின் மனப்போக்கும் ஒன்றுக்கொன்று எவ்வாறு மாறுபட்டிருந்த தென்பதைப் பார்த்தீர்களா? ஒன்றாகவே இருந்து தங்களது தாயின் நடத்தையைக் கவனித்தவர்களான இருவரில் ஒருத்தி தனது தாயே விபசாரி என்றும் மதனகோபாலன் யோக்கியன் என்றும் நினைக்க, மற்றவள், அவனே அயோக்கியன் என்றும் தனது தாய் குற்றமற்றவள் என்றும் நினைத்தது அவரவர்களது குணத்தைப் பொருத்திருந்த தென்றே சொல்ல வேண்டும். ஒருவனுக்கு அமிர்தம் போல இருப்பது இன்னொரு வனுக்கு விஷமாக முடிகிறது. காக்கை மாம்பழத்தைத் தின்கிற தில்லை; ஆனால் வேப்பம்பழமே அதற்கு மகா இனிமையாகத் தோன்றுகிறது. கிளியோ வேப்பம் பழம் கசப்பானதென்று தள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/29&oldid=646169" இலிருந்து மீள்விக்கப்பட்டது