பக்கம்:மதன கல்யாணி-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மதன கல்யாணி

விட்டு மாம்பழத்தைத் தின்கிறது. இது அதனதன் நாவின் அமைப்பையும் பழக்கத்தையும் பொருத்ததாக இருக்கிறது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணமும் மனப்போக்கும் நோக்கமும் அமைப்பும் பெற்று முரணும் கோடாதுகோடி ஜீவன்கள் நிறைந்துள்ள உலகில் மனிதன் எல்லோரையும் திருப்தி செய்யும் படி நடப்பது மகா கடினமான காரியமல்லவா! அதிலும், கோமள வல்லியைப் போல, பிறர் விஷயத்தில் விரைவாகக் குற்றம் கருதாமல், மிகவும் தயாளமாக நினைப்பவர் சிறுபாலோரும், துரை லானியம்மாளைப் போல பிறர் விஷயத்தில் கெடுதலான அபிப் பிராயத்தையே கொள்வோர் பெரும்பாலோராகவும் இருக்கின்ற னர். பொதுவாக, ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவர் சிறுமியர்கள், எதிலும் தங்களது பெற்றோரது உதாரணத்தைப் பின்பற்றியே நடப்பது இயற்கையாக இருப்பது பற்றி பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக ஒழுகி, துரைஸானியைப் போல் உள்ள தமது மக்கள் சந்தேகிக்க இடங்கொடாதபடி நடப்பதே முதன்மையான கடமையாகிறது. இல்லையானால், அப்படிப்பட்ட குழந்தைகள் துர்நடத்தையில் இறங்கி தமது ஆயுட்காலம் முழுதும் கெட்டுத் துயரடைவதற்கு, அவர்களே உத்திரவாதியாகின்றனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ கல்யாணியம்மாள் தான் செய்த ஒர் அற்பப் பிழையை மறைக்க எத்தனையோ பொய்களைச் சொல்லவும், தீமைகளைச் செய்யவும் நேர்ந்ததன்றி, துரைஸானி யம்மாள் கெடுவதற்கும், அதனால் அவளுக்கும் மற்றவருக்கும் தீராத் துன்பமும் மாறாத் துயரமும் உண்டாவதற்கும் வழி ஏற்பட்டது. ஆதலால் குழந்தைகளுடைய பெற்றோர் தமது நடத்தையில் மிகவும் எச்சரிப்பாக இருப்பார்களாக,


15-வது அதிகாரம்

துரையம்மாள்

முன்னதிகாரத்தில் குறிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாள் பிற்பகல் இரண்டு மணி சமயத்தில், மீனாகூஜியம்மாளது பங்களாவின் மேன் மாடியில், நமது உல்லாச புருஷர்களான துரைராஜாவும், மாரமங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/30&oldid=646190" இலிருந்து மீள்விக்கப்பட்டது