பக்கம்:மதன கல்யாணி-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27

கலம் மைனரும் மிகுந்த உற்சாகத்தோடு நகைத்தும் சம்பாவித்தும் இடையிடையில் பீடி என்னும் உயர்தரச் சுருட்டை வாயில் வைத்து புப் புப் என்று புன்கையை வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தனர். மைனர் கருப்பாயியின் வீட்டிலிருந்து தப்பியோடியது, போலிஸ் இன்ஸ்பெக்டரைப் போல வேஷந்தரித்து வந்த பெண் பிள்ளையோடு குதிரை மீது சென்றது, பாலாம்பாளுக்குத் தான் பத்திரம் எழுதிக் கொடுத்தது, அங்கே திருடர் வந்தது, தான் போலீஸ் ஸ்டேஷன் சிறைச்சாலையில் இருந்தது, அதன் பிறகு தன்னை பாலாம்பாள் விடுவித்தது முதலிய விவரங்களை எல்லாம் துரைராஜாவிடத்தில் சொல்லாமல் மறைத்துவிட்டு, தான் அந்த இரண்டு நாட்களும், பாலாம்பாளது வீட்டிலேயே பரமசுகம் அனுபவித்திருந்ததாக அவனிடத்தில் தெரிவித்ததன்றி பாலாம் பாளது அழகைப்பற்றியும், குணத்தைப் பற்றியும் பெரிதும் புகழ்ந்து அவள் அதுகாறும் தன்னைத் தவிர, வேறு எந்தப் புருஷனையும், கையால் திண்டிக்கூட அறியாதவள் என்றும், அவள் தன் மீது தனது உயிரை வைத்து, தன்னை விட்டு ஒரு நொடி நேரமும் பிரியமாட்டேன் என்கிறாள் என்றும் கூறி, அவளை அபாரமாகப் புகழ்ந்ததன்றி அவளது சிநேகம் தனக்குக் கிடைத்ததைப் பற்றி மகா பெருமையாகப் புகழ்ந்து பேசிக் கொண்டான்.

அதைக் கேட்ட துரைராஜா மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, “அப்படியானால் நம்முடைய வேலைக்காரப் பொன்னம்பலம் ஏமாறியா போய்விட்டான்! நீ இந்த இரண்டு நாளாக மோகனாங்கியின் வீட்டில் அல்லவோ சுகத்தில் மூழ்கிக் கிடக்கிறாய் என்று நினைத்தேன்” என்றான்.

மைனர் (மிகவும் அலட்சியமாக):- ஆமாம்! மோகனாங்கி மாத்திரம் இவளைவிட அழகில் மகா சிறந்தவளோ இரண்டு பேரும் அழகில் சமமானவர்கள் என்றே நினைக்கிறேன். மோகனாங்கிகூட சுத்தமக்கென்றே சொல்ல வேண்டும்; இவளுடைய புத்திசாதுரியம் அவளுக்கு வரவே வராது. எப்படி இருந்தாலும் இருக்கட்டும்; இப்போது என் மனசு மோகனாங்கி யிடத்திலேயே செல்லவில்லை. இவளே எனக்குப் போது

மானவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/31&oldid=646211" இலிருந்து மீள்விக்கப்பட்டது