பக்கம்:மதன கல்யாணி-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மதன கல்யாணி

துரைராஜா- அப்படியானால், அந்த மோகனாங்கி இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்து நான் அவளைச் சிநேகம் செய்து கொள்வதில் இனிமேல் உனக்கு ஆட்சேபனை இல்லையே?

மைனர். அதைப்பற்றி எனக்கு இரட்டிப்பு சந்தோஷம், அவள் எங்கே இருக்கிறாள் என்ற விவரத்தைக்கூட நான் பாலாம்பாளி டத்தில் கேட்டு வந்து சொல்லுகிறேன்; ஆனால், இன்னொரு சங்கடம் இருக்கிறது; நான் இனிமேல் மோகனாங்கியைப் பற்றி நினைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் மேலே தான் அவள் என்னுடைய விருப்பத்துக்கு இணங்கினாள். இப்போது நான் அவளுடைய விலாசத்தைக் கேட்டாள் அவள் கட்டாயம் சந்தேகங் கொள்வாள் ஆகையால், இன்னும் ஐந்தாறு நாள்கள் கழிந்த பின், உன்னையும் என்னோடுகூட அங்கே அழைத்துக் கொண்டு போய், நீ என்னுடைய சொந்தக்காரன் என்று சொல்லி, உனக்காக அந்த மேல்விலாசம் வேண்டும் என்று கேட்டால், அவள் சந்தேகப் படாமல் ரகசியத்தை வெளியிட்டு விடுவாள். அதுவரையில் பொருத்துக் கொண்டிரு; நீ பழைய பெருச்சாளி, அந்த விஷயத்தில் உனக்கு என்னைப் போல அவ்வளவு ஆத்திரம் இருக்காது.

துரைராஜா:- மோகனாங்கியோடு சிநேகம் செய்து கொள்ள யாருக்குத்தான் ஆத்திரம் இருக்காது. வேறு எந்த விஷயத்தில் என்னுடைய ஆத்திரம் தணிந்தாலும் இந்த விஷயத்தில் நான் சாகிற வரையில் என்னுடைய ஆவல் தணியாது. அது இருக்கட்டும் இன்றைய தினம் பார்க் பேர் ஆரம்பமாகிறதே, பாலாம்பாளோடு போகப் போகிறாயா? இல்லாவிட்டால், அம்மாள் தங்கைகள் இவர்களை அழைத்துக் கொண்டு போகப்போகிறாயா?

மைனர்:- பாலாம்பாளுக்கு இன்று உடம்பு சரியாக இல்லை; அவள் நாளைக்கு வரப்போகிறாள். நான் இந்த இரண்டு நாளும் அங்கே இருந்துவிட்டு இன்று காலையிலே பங்களாவுக்கு வந்தேன். என்னோடு ஒருவரும் பேசவேயில்லை. அவர்களுக் கெல்லாம் என்மேல் கோபம் போலிருக்கிறது. நேற்றைய தினம் இங்கே இவர்கள் எனக்கும் கண்மணிக்கும் நிச்சயதாம்பூல முகூர்த்தம் வைத்திருந்தார்களாம். அதற்கு நான் வரவில்லை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/32&oldid=646231" இலிருந்து மீள்விக்கப்பட்டது