பக்கம்:மதன கல்யாணி-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 மதன கல்யாணி

செய்த காரியம் ஊர் முழுதுமா அடிபட வேண்டும் இந்த விஷயம் இப்படி சந்தி சிரிக்கையில் ராமலிங்கபுரத்தார் வந்து இதைக் கேள்வி யுற்றால், குடிகெட்டுப் போய்விடும்! அப்புறம் அவர்கள் நம்முடைய வீட்டில் தண்ணிர்கூடக் குடிக்க மாட்டார்களே! ஈசுவரா! என்ன கொடுமை இது!” என்று கூறி நிரம்பவும் விசனத்தி லாழ்ந்தாள்.

உடனே சிவஞான முதலியார் கல்யாணியம்மாளை நோக்கி, “சரி, இனிமேல் என்ன செய்கிறது. வருவதை அனுபவித்துத் தான் தீரவேண்டும். இவ்வளவு தைரியமாகக் கடிதம் எழுதியிருக்கிற மனிதர்கள் எப்போது வருவார்களோ, எப்படிப்பட்ட ஏற்பாடுக ளோடு வருவார்களே என்பது தெரியவில்லை. ஆகையால் நாம் இந்த நிமிஷம் முதலே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் இனி காலதாமசம் செய்வது சரியல்ல. நான் உடனே ஒரு கடிதம் எழுதியனுப்புகிறேன்” என்று கூறிய வண்ணம் எழுந்து, காகிதம் முதலிய எழுது கருவிகள் இருந்த மேஜையண்டை போய் உட்கார்ந்து ஒரு கடிதம் எழுதி உறைக்குள் போட்டு மேல்விலாச மெழுதி வைத்துக் கொண்டு ஒரு தாதியை அழைத்து, அரண்மனை யில் உள்ள வேலைக்காரர்களை எல்லாம் அழைத்து வரச் சொல்ல, சொற்ப நேரத்தில் சுமார் இருபது ஆட்கள் அங்கே நின்றனர். உடனே சிவஞான முதலியார் அவர்களுள் ஒருவனை அழைத்து அவனிடத்தில் கடிதத்தைக் கொடுத்து வேகமாக சைதாப் பேட்டைக்கு ஒடி அங்கே இருந்த தமது நண்பரான மிராசுதார் யோகலிங்க முதலியாரிடம் அதைச் சேர்த்து மறுமொழி எழுதி வாங்கிக் கொண்டு உடனே ஒடி வரும்படி சொல்லி அவனை அனுப்பிவிட்டு, மற்றவர்களை நோக்கி, “நீங்கள் எல்லோரும் இன்று பகலிலும் ராத்திரியிலும் எங்கேயும் போகாமல் பங்கள வைச் சுற்றிலுமிருந்து ஜாக்கிரதையாகக் காவல் காத்துக் கொண் டிருக்க வேண்டும். நம்முடைய சமஸ்தானத்து மூத்த குழந்தையான துரைஸ்ானியம்மாளைக் கலியாணம் செய்து கொடுக்கும்படி பல ஜெமீந்தார்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; ராமலிங்கபுரம் ஜெமீந்தாருடைய பிள்ளைக்குக் கொடுப்பதாக நாங்கள் தீர்மானித்து இரண்டு நாளைக்கு முன் கடிதம் எழுதினோம். அந்த சங்கதியை அறிந்து கொண்ட இன்னோரிடத்து ஜெமீந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/292&oldid=646174" இலிருந்து மீள்விக்கப்பட்டது