பக்கம்:மதன கல்யாணி-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மதன கல்யாணி

கையும் தடியுமாக நின்று கொண்டிருந்த வேலைக் காரர்களை எல்லாம் உஷார்ப்படுத்தி விட்டு, பங்களாவின் வாசலில் நிறுத்தப் பட்டிருந்த தமது ஸாரட்டில் ஏறிக் கொண்டு பங்களாவிற்கு வெளியே வந்தார். வந்தவர் அந்த பங்களாவின் வடபுறமாகச் சென்ற ராஜபாட்டையின் வழியாகப் போலீஸ் கமிஷனரினது கச்சேரிக்கோ, அல்லது, போலீஸ் ஸ்டேஷனுக்கோ போக வேண்டும் ஆதலால், அதன் வழியாக ஸாரட்டை ஒட்டச் செய்தார். அவ்வாறு ஸ்ாரட்டு வண்டி அரைக்கால் மயில் தூரம் போகவே, அவ்விடத்தில் வெளியூர்களில் இருந்து வந்த இரண்டு வைக்கோல் வண்டிகள் வழியில் தாறுமாறாக நின்றதும், அவ்விடத்தில் குதிரை மேல் ஏறிக் கொண்டிருந்த ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரும், ஒரு ஜெவானும் அந்த வண்டிக்காரர்களை சார்ஜ் செய்வதாக அதட்டி சரியான வழியில் போகும்படி சொல்லிக் கொண்டிருந்ததும் தெரிந்தன. கும்பிடப் போன தெய்வம் குறுக்கிட்டது போல, தமது வழியிலேயே நின்று கொண்டிருந்த போலீசாரைக் காணவே சிவஞான முதலியாருக்கு மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் லாரட்டு வண்டி அந்த இடத்தை அடைந்தது. ஒரு பெருத்த குதிரையின் மீது ஆடம்பரமாக உட்கார்ந்திருந்தவரும், முறுக்காகவும் அழகாகவும் ஒதுக்கி விடப்பட்டிருந்த தாடி மீசைகளோடு காணப்பட்டவரும், துருக்க ஜாதியைச் சேர்ந்தவருமான அந்தப் போலீஸ் இன்ஸ் பெக்டர், ஸாரட்டைக் கவனிக்காமல், வைக்கோல் வண்டிக்காரர் களை நோக்கி, கடுகடுத்த முகத்தோடு அதட்டி, ஜெவானைப் பார்த்து, “இந்த முட்டாள் பயல்களை உடனே ஸ்டேஷனுக்குக் கொண்டு போ. ரஸ்தாவை எல்லாம் சுத்தமாக அடைத்து விட்டார்கள்” என்று கூறினார். அதைக் கேட்ட ஜெவான் பார்த்து பயந்து அங்குமிங்கும் குதித்து நாட்டிய மாடி, “வாங்கடா, வாங்கடா ஒட்டுங்கடா ஸ்டேஷனுக்கு” என்று கூறி ஆவேசங் கொண்டவன் போலத் தலை விரித்தாடிக் கொண் டிருந்தான். அப்போது சிவஞான முதலியார் தமது வண்டியை ஒருபுறமாக நிற்கவைத்து விட்டுக் கீழே இறங்கி, போலீஸ் ஜெவான் இருந்த இடத்திற்குப் போய் அவனண்டையில் நெருங்கி நின்று, “அப்பா, அடேய் இவர் இந்த டிவிஷன் இன்ஸ் பெக்டரா?” என்றார். அந்த ஜெவான், “இந்த டிவிஷன் எஜமான் தான்” என்றான். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/294&oldid=646178" இலிருந்து மீள்விக்கப்பட்டது