பக்கம்:மதன கல்யாணி-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295

அனுப்பி வேறே நான்கு ஜெவான் களை கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் அழைத்துவரன் செய்து, அவர்களுள் இருவரை ஆயுதபாணி களாகக் கல்யாணியம்மாளது அந்தப்புரத்தில் இரண்டு வாசற்படி களிலும் நிற்க வைத்துவிட்டு, மற்ற இரண்டு ஜெவான்களையும் ரோட்டின் ஒரமாக, பங்களாவின் வெளிவாசலுக்கருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி மறைந்திருக்கும்படி செய்துவிட்டு, தமது அறையில் இருந்தபடி ஜன்னல்களின் வழியாக நாற்புறங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். பங்களாவின் வாசலில் மரத்தின் மீதிருந்த ஜெவான்களுக்கு ஏதாகிலும் சம்சயம் தோன்றினால், அவர்கள் உடனே ஒரு சிவப்புத் துணித்துண்டை ஆட்டுவ தென்றும், அதிலிருந்து இன்ஸ்பெக்டர் உட்புறத்தில் எச்சரிப்பாவ தென்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு அன்றைய பகல் முழுதும் மாரமங்கலத்தாரது பங்கள யுத்தகளம் போல பெருத்த போருக்கு ஆயத்தமாக வைக்கப்பட் டிருந்தது. பொழுதும் போய்க் கொண்டே இருந்தது. எவருக்கும் ஆகாரத்திலாவது தண்ணிலாவது ஒய்விலாது புத்தி செல்லாமை யால் எல்லோரும் அதே தியானமாக இருந்தனர். எங்கேயாவது ஒர் எலி ஒடிய ஓசையோ, அல்லது, பட்சி இறகை அடித்துக் கொண்ட ஒசையோ கேட்குமானால், அந்தப் பங்களாவிலிருந்தோரது இருதயங்கள் எல்லாம் திடுக்கு திடுக்கென்று அடித்துக் கொள்ளும். எல்லோரும் திடுக்கிட்டுப் பதைபதைத்துத் தங்களது கையில் இருந்த ஆயுதங்களை உறுதியாகப் பிடித்தனர். எல்லோரிலும் கல்யாணியம்மாளது நிலைமையும் கோமளவல்லியம்மாளது நிலைமையுமே பரம சங்கடமானவையாக இருந்தன. அவர்களது ஆவலும் பேரச்சமும் உச்ச நிலையை அடைந்து கொண்டே இருந்தன. அடிக்கடி அவர்களுக்கு நாவறண்டு போயிற்று. துரைஸானியம்மாள் ஒருத்தியே எவ்விதமான சலனமும் அற்றவள் போலக் காணப்பட்டு, “இந்த உலகமே அழிவதானாலும், அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்று சொல்லுகிறவள் போல ஏதோ ஒரு நாவலைப் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். வேலைக்கிரிகள் எல்லோரும் முட்டைகள் “ அசைவற்றுப் பேச்சு மூச்சின்றி அப்படியப்படியே உட்கார்ந்து குட்டுகுட்டென்று விழித்துக் கொண்டிருந்தனர். அந்த நிலைமையில் மாலை ஐந்தரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/299&oldid=646187" இலிருந்து மீள்விக்கப்பட்டது