பக்கம்:மதன கல்யாணி-2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 மதன கல்யாணி

அரைக்கால் மயில் தூரம் வரையில் ஓடிவந்து கடைசியாகப் பின்தங்கி விட்டதாகத் தோன்றியது. அதற்குள், முன்னால் போது மோட்டார் வண்டி தலை கால் தெரியாமல் வாயுவேக மனே வேகமாகச் சென்று கண்ணிற்குத் தெரியாமல் மறைந்து போது விட்டது. ஸாரட்டு வண்டியிலிருந்த சிவஞான முதலியார் பெருத்த திகிலடைந்து வேர்த்து விருவிருத்து அன்றைய தினம் தாம் தப்புவதில்லை என்றே நினைத்து அவ்வளவு தூரம் வந்தவர் பின்னால் ஆட்கள் தொடர்ந்து வரவில்லை என்பதை உணரவே, அவருக்கு ஒரு வகையான துணிவு தோன்ற ஆரம்பித்தது. அப்படி இருந்தும், அந்த ஆட்கள் இன்னமும் அதிகமான ஆட்களை அழைத்துக் கொண்டு ஒருவேளை மறுபடியும் தொடர்ந்து வருவார்களோ என்ற அச்சமும் கவலையும் எழுந்து துண்டவே, அவர் தமது விசையைத் தளர்த்தாமல் குதிரையை நாற்கால் பாய்ச்சலிலேயே துரத்திக் கொண்டு போனார். இருந்தாலும், கல்யாணியம்மாளும, பெண்களும், அந்நேரம் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்ற நினைவும் திருப்தியும் உண்டாயின. அப்போது அந்த வண்டிக்குள் இருந்த தாதிகள் எல்லோருக்கும் கருப்பம் கலங்கிக் குடல் நடுக்க மெடுத்துப் போனது. அவர்கள் வண்டிக்கு வெளியில் பார்க்கவும் அஞ்சித் தங்களது கண்களை மூடிக் கொண்டு பேச்சு மூச்சின்றி அச்சமே வடிவாக வெளவால்கள் போல மூலையோடு மூலையாகத் தொற்றிக் கொண்டிருந்தனர். சிவஞான முதலியார் வண்டிக்காரன் முதலிய வேறு எந்த ஆண் பிள்ளைகள் உதவியுமின்றி நாலைந்து கிழத் தாதிகளை அழைத்துக் கொண்டு போனதனாலும், அவர் அழகாகச் சவுக்கங் கட்டிப் பேசுவதைத் தவிர, தடியைக் கண்டால் தஞ்சாவூர் வரையில் ஒடக்கூடியவர் ஆதலாலும், அவரது நிலைமை விவரிப்பதற்குச் சாத்தியமற்றதாக இருந்தது. அவரது பிராணனில் முழுப்பாகமும் எமனுலகை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தென்று சொல்வது மிகையாகாது. அவரது ஸாரட்டின் குதிரையினது உடம்பிலிருந்து வியர்வை வெள்ளம் பெருக்கெடுத்து வழிந்தது. அவரது குதிரைக்கு இரைப்பெடுத்ததைக் காட்டிலும் அதிகமாக அவருக்கு இரைப்பெடுத்ததைக் காண்போர், அந்த ஸாரட்டை அவர் தான் இழுத்துக் கொண்டு ஓடி வந்தவரோ என்று ஐயங் கொள்ளத்தக்கதாக இருந்தது. அவரது தலைப்பாகை சட்டைகள் வஸ்திரங்கள் முதலிய யாவும் நனைந்து போய் சேறாகி விகாரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/318&oldid=646228" இலிருந்து மீள்விக்கப்பட்டது