பக்கம்:மதன கல்யாணி-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 315 தோற்றமடைந்தன. அப்படிப்பட்ட மகா பரிதாபகரமான நிலைமையில் தமது உயிருக்காக ஒடிக்கொண்டிருந்த சிவஞான முதலியார் அரை நாழிகை நேரத்தில் எழும்பூரை அடைந்து அங்கே இருந்த போலீஸ் கமிஷனரது கச்சேரியின் வாசலண்டை போய், செத்தேன் பிழைத்தேன் என்று வண்டியை நிறுத்தினார். அப்போது சந்றேறக்குறைய எட்டு மணி அடிக்கும் சமயமாக இருந்தது. ராஜபாட்டையில் ஆங்காங்கு பழுத்துத் தொங்கிய மின்சார விளக்குகள் ஜெகஜ்ஜோதியாக மின்னிக் கொண்டிருந்தன. அந்தப் பாட்டையில் அப்போது ஜனங்களினது நடமாட்டம் அவ்வளவாக இல்லாமலிருந்தது. லாரட்டு வண்டியை நிறுத்திய சிவஞான முதலியாருக்கு அப்போதும் வேர்த்து விருவிருத்து மேல் மூச்சு வாங்கியதாகையால் அவர் பெரும்பாடுபட்டுக் கீழே இறங்கினார். அது தான் தாங்கள் இறங்க வேண்டிய இடம் என்பதை உணர்ந்த உடனே ஸ்ாரட்டிலிருந்த கிழத் தாதிகளுக்கெல்லாம் உயிர் திரும்பி வந்தது. பின்னால் ஆட்கள் துரத்திக் கொண்டு வருவதற்குள் தாம் வண்டியை விட்டிறங்கி அங்கே இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு எல்லோரும் சரசரவென்று

கீழே இறங்கினார்கள். அவர்கள் இறங்கியவுடனே, சிவஞான முதலியார் வண்டியையும் குதிரையையும் மறந்து, தாதிகளை அழைத்துக் கொண்டு தடதடவென்று போலீஸ் கமிஷனரது கச்சேரியிலிருந்த் பங்களாவிற்குள் நுழைந்து உள்ளே இருந்த கட்டிடத்தை அடைந்து அதற்குள்ளேயும் தாராளமாக நுழைய ஆரம்பித்தார். அந்தக் கச்சேரி விஸ்தாரமான ஒரு கட்டிடம் ஆதலால் அதற்குள் எங்கும் நாற்காலிகளும் மேஜைகளும்

நோட்டுப் புஸ்தகங்களும் தஸ்தாவேஜுகளுமாக நிறைந்திருந்தன. மின்சார விளக்குகள் கச்சேரி முழுதிலும் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கே சில குமாஸ்தாக்கள் உட்கார்ந்து அவசரமான ஏதோ சில அலுவல்களைக் கவனித்துக்

கொண்டிருந்தனர். கச்சேரிக்குள்ளே நுழையும் தாழ்வாரத்தில்

இரண்டு போலீஸ் ஜெவான்கள் உட்கார்ந்து பாராக் கொடுத்துக்

கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் நாலைந்து கிழவிகளை

அழைத்துக் கொண்டு குடுகுடுவென்று உள்ளே நுழைந்த சிவஞான

முதலியாரைக் கண்ட ஜெவான்களுள் ஒருவன், “யாரையா அது? எங்கே உள்ளே போகிறீர்கள்? இந்தப் பெண் பிள்ளைகள்

எல்லாம் யார்? சங்கதி இன்னதென்று சொல்லாமல் உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/319&oldid=646230" இலிருந்து மீள்விக்கப்பட்டது