பக்கம்:மதன கல்யாணி-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37

தனது பெரும் பாக்கியத்தைப் பற்றி அளவற்ற பெருமையடைந்து ஆனந்தத்தினாலும், மனவெழுச்சிப் பெருக்கினாலும், உற்சாகத்தி னாலும் இன்பமோ துன்பமோ என்பது தெரியாத நிலைமையை அடைந்து, மிகவும் தவித்திருந்தான். அவனது இருதயம் தடக் தடக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. பெஞ்சுப் பலகையில் உட்கார்ந்து கொண்ட இருவருக்கும் இடையில், ஒரு சாண் அளவே இடைவெளி இருந்ததாகையால், அப்படிப்பட்ட இன்பக் களஞ்சியத்திற்கு அவ்வளவு சமீபத்தில் இருந்ததனால் துரைராஜா வின் தேகம் ஆனந்த பரவசமடைந்து, கட்டிலடங்காமல் துடித்தது. அவளது அழகிய முகத்தைப் பார்க்கவும், அவளை ஆலிங்கனம் செய்து அவளிடத்தில் சரசலிலைகள் புரியவும் அவனது மனம் பதறியது. நாற்புறங்களையும் அவன் திரும்பிப் பார்த்து எவரும் தங்களைப் பார்க்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, கரை கடந்த காதலோடு அந்த ஸ்திரியின் முகத்தை உற்று நோக்கி மிகவும் உருக்கமான குரலில் பேசத் தொடங்கி, “இப்போது தான் எவருமில்லாத தனியான இடத்தில் இருக்கிறோமே; அந்த முகமூடியை கொஞ்சம் விலக்கி, இந்தப் பரம பக்தனுக்கு அந்த சுவர்க்க தரிசனம் காட்டக்கூடாதா? என்னுடைய ஆயுசு காலம் முடிய என் மனசில் இன்பச்சுடர் கொளுத்தும் அந்தச் சந்திர பிம்பத்தை எனக்குக் காட்ட இன்னமுமா ஆட்சேபம்?” என்று தனது கையை மெதுவாக அவளது மோவாய்க் கருகில் கொண்டு போனான். அந்த ஸ்திரீ அவனது கை தன்மீது படாமல், இன்னமும் சற்று விலகிய வண்ணம் “துரையே! இந்த முகத்தை மாத்திரமல்ல, என்னுடைய அபாரமான செல்வம், அளவில் அடங்காத காதல், கட்டழகும் யெளவனமும் வழிந்த என்னுடைய உடம்பு முதலிய சகலமான பொருளையும் சுகபோகங்களையும் உமக்கே கொடுக்க வேண்டும் என்ற ஆவலும், பிரேமையும் கொண்டு தானே நான் இத்தனை பாடுகள் பட்டு, செய்யத்தகாத காரியங்களை எல்லாம் செய்து இவ்வளவு தூரம் வந்தேன். அப்படி இருந்தும் என்னுடைய முகத்தைக் காட்டுவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் ஏன் உண்டாக வேண்டும்? வலைக்குள் வீழ்ந்த புறா வேடனுடைய கையில் அகப்படாமலும் அவனுடைய போஜனத்துக்கு மாதுரியமான உணவாக அமையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/41&oldid=646260" இலிருந்து மீள்விக்கப்பட்டது