பக்கம்:மதன கல்யாணி-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மதன கல்யாணி

மலுமா போய்விடப் போகிறது. இனிமேல் எல்லாம் உம்முடை யது தான்; கவலைப்பட வேண்டாம். ஆனால், இங்கே திடீரென்று யாராவது வருவார்கள். அவர்கள் ஒருக்கால் நமக்குத் தெரிந்தவர்க ளாக இருக்கலாம். அவர்களைக் கண்டவுடன் நான் பயந்து முகமுடியை மாட்டிக் கொண்டால், அது சந்தேகத்துக்கு இடம் கொடுக்கும். அவர்கள் இவ்விடத்திலேயே வட்டமிடுவார்கள். நாம் நம்முடைய மனசைவிட்டுப் பேசி, நம்முடைய எண்ணங்களை எல்லாம் வெளியிட்டுச் சொல்லக்கூடாமல் போய்விடும். அற்ப சுகத்துக்காக ஆசைப்பட்டு, முதலுக்கே மோசம் வந்துவிடப் போகிறது. என்னுடைய மாளிகையை விட்டு நான் இன்றைக்கு வந்ததே பெருத்த பாடாக முடிந்து விட்டது. இந்தச் சந்திப்பு வீணாகப் போனால், இனிமேல் இப்படிப்பட்ட சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்க்குமோ வாய்க்காதோ? ஆகையால், என்னுடைய தேகசுகத்தில் எதையும் இப்போது அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைக் கொஞ்ச நேரத்துக்கு அடக்கிக் கொள்ள வேண்டும்” என்று மிகவும் நயமாகவும் அன்பாகவும் கூறினாள். அவள் அவ்வாறு பேசிய போது தனது இயற்கையான குரல் தெரியாதபடி ஒருவாறு மாற்றிக்கொண்டே பேசியதை துரைராஜா எளிதில் கண்டு கொண்டான். அவள் சொன்ன சொல் நியாயமானதென்று பட்டதாயினும், அவளது அழகிய முகத்தை, அன்று பிரிவதற்குள் எப்படியும் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆசை மாத்திரம் அடங்காமல் இருந்தது. உடனே துரைராஜா அவளை நோக்கி, “சரி: உன்னுடைய பிரியப்படியே ஆகட்டும். உன்னுடைய பிரியத்தை எல்லாம் நீ என் மேல் வைத்திருப்பதாகச் சொல்லும் போது, உன்னுடைய மனசுக்கு மாறான எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன் என்பதை நீ நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம்” என்று மிகுந்த தயாளத்தோடு மறுமொழி கூறினான்.

அதைக் கேட்ட வெள்ளைக்கார பெண், “மனசுக்கு ஒத்தபடி நடக்கும் அந்த மேலான குணம் உம்மிடத்தில் நிரம்பி இருப்பதி னாலே தான் என்னுடைய ஆசை முழுதையும் நீர் கவர்ந்து கொண்டீர். நானும் உமக்கு நிரந்தரமான அடிமையாகி விட்டேன். இனி எல்லாம் உம்முடையதே; கிணற்று நீரை இனி வெள்ளம் கொண்டு போகாது; ஆனால், என்னுடைய முகம் ஒரு வேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/42&oldid=646263" இலிருந்து மீள்விக்கப்பட்டது