பக்கம்:மதன கல்யாணி-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மதன கல்யாணி

நிபந்தனைக்கு இணங்காமல், என் கோரிக்கையை மறுத்து விடுவிரோ என்று மிகவும் கவலை கொண்டு வந்தேன், அது விலகியது. ஆனால் இன்னொரு பயம் என் மனதிலிருந்து வருத்து கிறது. இதற்கு முன் எப்போதும் பேசியறியாத நான் உமக்குக் கடிதம் எழுதி இவ்வளவு துணிகரமாக வேஷம் போட்டுக் கொண்டு வந்து உம்மோடு சிநேகம் செய்து கொள்ளுவதிலிருந்து, நான் நாணமும் கற்புமில்லாத துஷ்டை என்று நீர் எண்ணிக் கொள்ளுவிரோ என்ற பெருத்த அச்சம் இன்னமும் என் மனதில் இருந்து துன்பப்படுத்துகிறது. நான் வேறு விதத்தில் உம்மோடு பேச வேண்டும் என்று எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. ஆகையால், என் மனசுக்கு விரோதமாகவே, நான் இந்த மார்க்கத்தில் இறங்கினேன். இதைப் பற்றி உம்முடைய மனசில் ஏதேனும் சஞ்சலம் உண்டா?” என்று கிள்ளை போல மொழிந்தாள்.

அதைக் கேட்ட துரைராஜா, “அடாடா! அப்படியும் நினைப்ப துண்டா அதைவிட விசுவாசங்கெட்ட நினைவு வேறுண்டா? பூநீ தேவியைப் போல தானாக வரும் பாக்கியத்தை, எந்த மூடனாவது இகழ்வானா? ஒருநாளுமில்லை. வேறு வழியில்லாவிட்டால் என்ன செய்கிறது? இப்படித்தான் செய்ய வேண்டும். இதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் ஆயாசமில்லை” என்றான்.

அதைக் கேட்ட அந்த வெள்ளைக்கார மடந்தை, “சரி, அவ்வளவு தான் நான் கேட்டது. இனி நான் பாக்கியசாலி தான். உம்முடைய சொல்லை நான் வேதவாக்கியமாக நம்புகிறேன். இந்த நேரம் முதல் நான் உம்மை என்னுடைய கணவனாகவே மதிக்கிறேன். நீரும் என்னை உம்முடைய சொந்த நாயகியாகவே உறுதியாக எண்ணிக் கொள்ளலாம். இனி என்னுடைய மனசில் உள்ள சங்கதிகளை எல்லாம் உம்மிடத்தில் வெளியிட்டுச் சொல்லியே தீரவேண்டும். முதலில் நம்முடைய சிநேகம் நீடித்து நிற்பதற்கும், நாம் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து இன்புறுவதற்கும் ஒரு முக்கியமான இடைஞ்சலை நீக்கி வைக்கிறது உம்முடைய கையிலே தான் இருக்கிறது. அதை நீர் நீக்கி வைத்தால் தான், நீர் என்னிடத்தில் பிரேமை உள்ளவர் என்பது எனக்கு நன்றாக வெளியாவதன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/46&oldid=646270" இலிருந்து மீள்விக்கப்பட்டது