பக்கம்:மதன கல்யாணி-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மதன கல்யாணி

நாசமாகப் போக வேண்டும். அதற்காக, இல்லாத எழிலெல்லாம் எடுத்துப் பேசுகிறது. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கிற மாதிரி யோசனை சொல்லுகிறது. நம்மைப் போல மற்றவருக்கும் சுவாமி கொடுத்த புத்தி இருக்கிறது என்பதை கொஞ்சமும் நினைக்காமல் உளறுகிறது. அவமானப் படுகிறது. நான் அந்த மதனகோபாலனைச் சேர்க்க வேண்டாம் சேர்க்க வேண்டாம் என்று எத்தனையோ தடவை சொல்லி எச்சரித்தேன். அவன், படுக்கையறை வரையில் வரும்படி விடுகிறது. அவன் வந்து, எஜமானியம்மாளையே பெண்டாள ஆரம்பிக்கிறது! அந்த சங்கதி ஊர் முழுதும் பரவி சிரிப்பாகச் சிரிக்கிறது! அதை ஒருவரும் கேட்பாரில்லை. வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி, கெளரதையை இழக்காமல் இருக்க வேண்டிய பெண் பிள்ளைகள், தங்களுடைய மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள மறந்து போகிறது; வெளியில் போய் எல்லாக் காரியங்களையும் ஜெயிக்கும் திறமையுள்ள ஆண் சிங்கங்களுக்கு புத்தி சொல்லி அவர்களை அடக்கக் கிளம்பி விடுகிறது. யார் என்ன சொன்னாலும் நான் இந்த பாலாம்பாளை என்னுடைய உயிருள்ள வரையில் விடவேமாட்டேன். இப்போது நான் அங்கே போனவுடன், இங்கே நடந்த சம்பாஷணையை எல்லாம் அவளிடத்தில் சொல்லப் போகிறதன்றி, அவளுக்கு நான் எழுதிக் கொடுத்திருக்கும் பத்திரத்தையும் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்து வைத்து விடுகிறேன். ஏனென்றால், நான் தான் சொன்னபடி செய்ய வில்லையே என்று, வேறு ஆளை விட்டு நீங்கள் அந்தப் பத்திரத்தை அபகரித்துக் கொண்டுவர ஏற்பாடு செய்தாலும் செய்வீர்கள். அதற்கு இடம் கொடுக்காமல் தடுத்து விடுகிறேன். எனக்கு நேரமாகிறது. போகலாம் அல்லவா? பணம் மரியாதையாக வராதோ?” என்றான்.

அவன் மதனகோபாலனைக் குறித்துப் பேசிய வார்த்தைகளும் தனது நடத்தையைக் கண்டித்துப் பேசிய வார்த்தைகளும் பழுக்கக் காய்ந்த சலாகைகள் போல கல்யாணியம்மாளது செவிகளில் நுழைந்து, அவளது மனத்தைத் துளைத்துப் புண்படுத்தின ஆதலால் அந்த அம்மாள் கோபத்தினாலும், வெட்கத்தினாலும், தத்தளித்ததன்றி, அவன் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து கொடுப்பா னாகில், அதனால் தங்களுக்கு விலக்க ஒண்ணாத பெருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/74&oldid=646328" இலிருந்து மீள்விக்கப்பட்டது