பக்கம்:மதன கல்யாணி-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மதன கல்யாணி

துரைராஜா கண்டு கொள்ளக் கூடாமல் போய்விட்டது. இருந்தாலும், அவர் உள்ளே போனவுடனே, தான் அந்த சாரட்டு ஒட்டுகிறவனிடத்தில் நெருங்கி, அதில் வந்தவர் யார் என்பதை தந்திரமாக விசாரிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால் அந்தப் பெரிய மனிதர் கீழே இறங்கியவுடனே, வண்டியை அனுப்பிவிட்டு, அதன் பிறகே, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஆதலால் துரைராஜாவின் எண்ணம் பலியாமல் போய்விட்டது.

அவர் இரண்டு மூன்று தரம் இடிப்பதற்குள், கதவு திறக்கப் பட்டது. உடனே அவர் உள்ளே போய்விடவே, கதவு மறுபடி யும் மூடி உட்புறத்தில் தாளிடப்பெற்றது. அண்டை வீட்டுக்கார னான பொன்னுசாமி நாயகர் என்பவன் தன்னோடு அவ்வளவு நேரம் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தும், இப்போது வந்த கிழவர் யார் என்பதைப்பற்றித் தெரிவிக்காது போய்விட்டமையால், அவர் யாராவது புதிய விருந்தாளியாக இருக்க வேண்டும் என்று துரை ராஜா எண்ணமிட்டவனாக உட்கார்ந்திருந்தான்.

மதனகோபாலனது வீட்டிற்குள் நுழைந்தவர் சந்தனக்கட்டை வியாபாரியான பசவண்ண செட்டியார் என்று நமது வாசகர்கள் யூகித்துக் கொண்டிருக்கலாம். அவர் மைசூரிலிருந்து வந்தபின் மதனகோபாலனது வீட்டிலேயே இறங்கி இருந்தார். அவர் ஏதோ சில காரியங்களை முன்னிட்டு அன்றைய பகலில் வெளியிற் சென்றவர் அப்போதே திரும்பி வந்தார். அவர் உள்ளே நுழைந்த உடனே மதனகோபாலன் மிகுந்த வணக்கவொடுக்கம் பயபக்தி யோடு அவரை வரவேற்று உள்ளே அழைத்துப் போக, அவர் கூடத்திற் சென்று தமது தலைப்பாகை, சட்டை முதலிய ஆடை களைக் கழற்றி ஆணிகளில் மாட்டிவிட்டு, முற்றத்தில் இருந்த தண்ணிர்க் குழாயில் தமது கால்களைச் சுத்தி செய்து கொண்டு, கூடத்தில் இருந்த ஒரு சாய்மான நாற்காலியிற் சாய்ந்து கொண்டார். மதனகோபாலன், அவருக்குச் சிறிது தூரத்தில் நிரம்பவும் மரியாதையாக நிற்க, செட்டியார் மிகுந்த அன்போடு அவனை நோக்கி, “இன்றைக்கு நான் போன முக்கியமான காரியம் ஆகவில்லை. ஆனால் ஒரு சந்தோஷ சமாசாரம் தெரிந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/94&oldid=646368" இலிருந்து மீள்விக்கப்பட்டது