பக்கம்:மதன கல்யாணி-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97 மற்ற எல்லோரையும் வெளியில நிறுததிவிட்டு மைனரை மாத்திரம் அழைத்துக கொண்டு பங்களாவுக்குள் சென்றார். கொலை செய்து விட்டு வரும்படி மைனரை வெளியில் அனுப்பினவளான பாலாம்பாள் மேன்மாடத்தில் நின்றபடி எல்லா விஷயங்களையும் கவனித்து உணர்ந்து கொண்டு மிகவும் தவித்தவளாய்த் தனது பங்களாவிற்குள் மைனரும் சார்ஜண்டு துரையும் வருவதைக் கண்டு கதிகலங்கி நின்று கொண்டிருந்தாள். அப்போது அவர்கள் இருவரும் மேன்மாடத்தில் அவளிருந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்தனர். உடனே சார்ஜண்டு துரை மைனரை நோக்கித் தணிவான குரலில், "ஐயா! இவாகளெல்லாரும் நீர் கொலை செய்ததை நேரில் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீர் எப்படி வாதித்தாலும் இனி தப்ப முடியாது. உமக்கு அவசியம் மரண தண்டனை கிடைத்தே திரும். நீர் என்னிடத்தில் நிஜத்தைச் சொல்லிவிடும். இதோ நிற்கும் உம்முடைய சம்சாரத்தைப் பார்த்தால், எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நீர் தக்க பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை என்பது நன்றாகத் தெரிகிறது. நீர் உண்மையைச் சொல்லி விட்டால் நான் உமக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன்" என்று நயமாகப் பேசினார். அது வரையில் முரட்டு மிருகம் போல நடந்து கொண்ட அந்த சார்ஜண்டு துரை உண்மையில் நலல மனிதர் என்றும், தான் ஏதாவது லஞ்சம் கொடுத்து அவரைச் சரிப்படுத்தி விடலாம் என்றும், அதன் பொருட்டே அவா தன்னைத் தந்திரமாக உள்ளே அழைத்து வந்திருக்கிறார் என்றும் நினைததவனாய், உடனே கீழே விழுந்து அவரது காலைப பிடித்துக் கொண்டு, "ஐயா! நான ஏதோ ஆத்திரத் தில் இதைச் செய்து விட்டேன். இநத ஆபத்திலிருந்து நீ தான் என்னைக் காப்பாற்றிவிட வேண்டும். நான் உம்முடைய விருப்பம் போல நடந்து கொள்ளுகிறேன்" என்று கூறிக் கெஞ்சி மன்றாட, பாலாம்பாளும் உடனே துரையினது காலில் விழுந்து வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். அதைக் கண்டதுரை, "சரி, எழுந்திருங்கள்; நான் உம்மைத் தப்ப வைக்கிறேன்" எனறு கூறி, அவர்களை எழுந்திருககச் செய்த பிறகு மைனரைப் பார்த்து, "இப்போது இந்த பங்களாவில் எவ்வளவு பணம் இருக்கிறது?" என்றார். மைனர், "நோட்டாக ஐயாயிரம் ரூபாய் இருக்கிறது" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/101&oldid=853229" இலிருந்து மீள்விக்கப்பட்டது