பக்கம்:மதன கல்யாணி-3.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 உம்மைக் கொஞ்ச தூரம் அழைத்துக் கொண்டு போய்விட்டு விடுகிறோம்" என்று கூற, அதற்கிணங்கிய மைனர், பக்கத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து முறுக்கிக் கொடுக்க, பாலாம்பாளும் துரையும் சேர்ந்து மைனரது கைகள் இரண்டையும் முதுகுப் பக்கத்தில் கொணாந்து சேர்த்து இறுகக் கட்டிவிட்டனர். அதைக் கண்டு சிரித்துக் கொண்ட சார்ஜண்டு துரை மைனரை உடனே அழைத்துக கொண்டு வெளியில் வந்தார். அவ்வாறு வந்தவர் மிகவும் கோபமான கடுகடுத்த முகத்தோடு ஜெவானையும் மற்றவர்களையும் நோக்கி, "இவன் வழிக்கு வர மாட்டான் போலிருக்கிறது. நான் எவ்வளவு தூரம் நயமாகச் சொல்லியும் இவன் கேளாமல், என்னை ஏமாற்றிவிட்டுக் கொல்லைப் பககமாக ஒட ஆரம்பித்தான். இவனைப் பிடித்துக் கொண்டு வந்தேன். இனிமேல் இவன் எவ்வித இடக்கும் செய்ய முடியாது. அடேய் ஜெவான்! நீ இவனைப் பிடித்துக் கொள்" என்று கூறிய வண்ணம மைனரை ஜெவானிடத்தில் ஒப்புவித்தவ ராய்த் தமது குதிரையின் மீதேறி உட்கார்ந்து கொண்டு, "சரி; நடவுங்கள்" என்றார். உடனே ஜெவான் மைனரைப் பிடித்துக் கொண்டு நடக்கலானான்; மற்ற எல்லோரும் கூடவே தொடர்ந்து சென்றனர். அவ்வாறு அவர்கள் சுமார் 20-கஜ தூரம் சென்றனர். ஜெமீந் தாரையும், மற்ற ஆட்களையும் அனுப்பி விடுவதாகச் சொன்ன சார்ஜண்டு துரை அபபடிச் செய்யவில்லையே என்று மிகுந்த சந்தேகங் கொண்டவனாய், மைனர் போய்க் கொண்டிருந்தான். அப்போது அநத சார்ஜண்டு துரை, "அடேய் ஜெவான்! இனிமேல் இவன் திமிறமாட்டான். இவனை நேராகப் போலீஸ் ஸ்டேஷ னுக்குக் கொண்டுபோ; நான் இந்த ஜெமீந்தாருடைய பங்களா வுக்குப் போய், கொலை நடந்த இடம் முதலிய விவரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு வருகிறேன்" என்று கூறிய வண்ணம் தமது குதிரையைத் திருப்பி வயிற்றில் காலால் இடித்து விசையாக ஊக்க, அது நாற்கால பாய்ச்சலில் பாய்ந்தோடத் தொடங்கியது. சார்ஜண்டு துரை தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் சொத்துக் களை எல்லாம் அபகரித்துக் கொண்டு போகிறான் என்ற சந்தேகம் மைனரது மனதில் உண்டாயிற்று. அவன் ஏக்கமும், கலக்கமும்,