பக்கம்:மதன கல்யாணி-3.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 109 புத்தி! என்ன விபரீத புத்தி சரி; உன் பெயர் இருக்கட்டும். உன்னுடைய தம்பியின் பெயர் என்ன? ராஜாயி:- அவனுடைய பெயர் மோகனரங்கன். ஜெமீந்தார். அதுவும் அழகான பெயராகத்தான் இருக்கிறது! ஆனால் அவனுடைய புத்தி எப்படி இருக்குமோ? அவனுடைய திருவிளையாடல்களை எல்லாம் பார்த்தால் அதுவும் தெரிந்து போய்விடுகிறது. சரி; அவன் இப்போது எங்கே இருக்கிறான்? ராஜாயி:- அவன் இதுவரையில் மாரமங்கலம் ஜெமீந்தார் வீட்டில் ஒரு குமாஸ்தாவாக இருந்தான். இப்போது அவனும் எங்களிடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டான். ஜெமீந்தார்:- ஏன் வந்துவிட்டான்? உங்களுக்குப் பக்கபலமாக இருக்கட்டும் என்று அவனையும் அழைத்துக் கொண்டீர்களோ? ராஜாயி:- இல்லை இல்லை. அவன் மிகவும் பயந்தவன்; அவனுக்குச் சமயோசிதமான தந்திரமும் சாமர்த்தியமும் சுத்தமாக இல்லை; அவனை அந்த ஜெமீந்தாரம்மாளே அனுப்பிவிட்டாள். ஜெமீந்தார்:- சரி; அவனும் அவ்விடத்தில் அக்காளுடைய தொழிலைச் செய்திருப்பான். அதற்காக அவர்கள் ஒட்டியிருப் பார்கள். ராஜாயி:- அதெல்லாம் ஒன்றுமில்லை; அவன் நிரம்பவும் அழகாக இருப்பான். அந்த ஜெமீந்தாருடைய மூத்த பெண் துரை ஸ்ானியம்மாள் என்று ஒருத்தி இருக்கிறாள். அவள் இவனைப் பார்த்து மோகித்து இவனையே கட்டிக் கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தாள். அவளும் என் தம்பியும் தனியாக இருந்த போது, அவளுடைய தாய் கண்டு, என் தம்பியை அனுப்பி விட்டாள்! நாங்கள் எங்களுடைய சாமர்த்தியத்தைக் காட்டி, அவர்களை எல்லாம் ஏமாற்றி, பெண்ணைக் கொண்டு போய் நேற்றைக்கு முந்தியநாள் இரவில் என் தம்பிக்குக் கட்டி அவளையும் எங்களிடத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம் - என்று அவர்கள் பெண்ணைக் கொண்டு போய்க் கலியாணம் செய்த வரலாறுகளை எல்லாம் விவரமாகக் கூறினாள்.