பக்கம்:மதன கல்யாணி-3.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 மதன கல்யாணி தினத்தில் வாந்தி பேதி கண்டு இறந்து போய்விட்டதாகவும், பிரேதங்கள் கொளுத்தப்பட்டுப் போனதாகவும் எழுதினர்களாம். அதைக் கேட்ட முதல் அவரது மனமும் தேகமும் இடிந்து பாழடைந்து போய், அவர் கேவலம் பைத்தியக்காரர் போலவே இருந்து வந்தார். அதற்கு இரண்டு வருஷ காலத்துக்குப் பிறகு ஓரிடத்திலிருந்து இரண்டு அநாதைக் குழந்தைகள் அவருக்குக் கிடைத்தார்கள். அண்ணனும் தங்கையுமான அந்தக் குழந்தைகள் அவருடைய குழந்தைகள் போலவே அதிக ரூபலாவண்ணியம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர் அவர்களை வாங்கி, தம்முடைய வாஞ்சையையெல்லாம் அவர்களின் மேல் வைத்து வளர்த்து அவர்களை அபிமான புத்திரன் புத்திரியாக மதித்து வந்தார். அவர்கள் இருவரும் நற்குண நன்னடத்தைகளுக்கு இருப்பிடமாகவும், அழகும், விவேகமும் பரிபூரணமாக நிரம்பப் பெற்றவர்களாகவும் வளர்ந்தார்கள். சென்ற ஏழெட்டுமாச காலத்துக்கு முன் வரையில் அவர்கள் அங்கேயே இருந்தார்கள். ஆனால் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம், அவருக்குத் தம்முடைய மனைவி மக்களின் நினைவு வந்து வந்து அடிக்கடி போராடியதை கருதி இவர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து இந்த ஊரில் சொற்ப காலம் இருக்கும்படி அனுப்பி வைத்தார். இவர்கள் இருவரும் கோமளேசுவரன் பேட்டையில் அந்த சுந்தர விலாஸ்த்தில் இருந்து வந்தார்கள். நான் இப்போது அங்கே தான் இறங்கி இருந்தேன். ஆனால், அவர்களும் இனி என்னோடு இந்தப் புதிய பங்களாவில் வந்திருக்கப் போகிறார்கள். நாளைக்குக் காலையில் நாள் நல்லதாக இருப்பதால் அவர்கள் அப்போது தான் வரப் போகிறார்கள். ஆகையால் எனக்கு இந்தப் புதிய பங்களா அவ்வளவு தனிமையாகத் தோன்றாது. வக்கீல்:- இந்த மாதிரி இரண்டு குழந்தைகளை வாங்கி அபிமான புத்திரன் புத்திரிகளாக வளர்த்து வந்த விஷயத்தைப் பற்றியாவது, அவர்களை இந்த ஊருக்கு அனுப்பிய விஷயத்தைப் பற்றியாவது அவர் எனக்கு இதுவரையில் தெரிவிக்கவே இல்லை. அவர் எனக்கு இதுவரையில் எத்தனையோ கடிதங்கள் எழுதி அனுப்பி இருக்கிறார். ஒரு கடிதத்திலாவது இந்தச் சங்கதியைப் பற்றி ஒரு கோடிகூடக் காட்டவில்லையே!