பக்கம்:மதன கல்யாணி-3.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9 செட்டியார்:- அவருடைய பரிதாபகரமான நிலைமை தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் தாங்கள் அவர்மேல் குறை கூறலாமா? அவருடைய அருமையான மனைவி மக்கள் எல்லோரும் அகால மரணமாகப் போய் அவரை ஆராத்துயரத்தில் ஆழ்த்திவிட்டார்கள், அவருக்கு உயிரோடிருக்கிற உறவினர்கள் எல்லோரும் சத்துருக் களாக இருக்கிறார்கள். அவருடைய சமஸ்தானமோ ஒரு பக்கத்தில் இருக்கிறது. அவரோ வேறோரிடத்திலிருந்து வனவாசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சங்கடமான நிலைமையில், அவர் இந்த சந்தனக்கட்டை வர்த்தகத்தில் இறங்கினால், அவருடைய மனசும் நினைவும் அந்த விஷயத்தில் செல்லுவதால், அவருடைய பழைய நினைவை மறந்து பைத்தியங் கொள்ளாமல் இருப்பார் என்று நினைத்து அதைச் செய்து வருகிறார். அவருக்கு இப்போ திருக்கும் ஞாபகம் அடுத்த நிமிஷத்தில் இருக்கிறதில்லை. அவரைத் தாங்கள் நேரில் பார்ப்பீர்களானால் தாங்கள் அவர்மேல் இப்படி யெல்லாம் குறை கூறமாட்டீர்கள். வக்கீல்:- (சந்தோஷமும் புன்னகையும் காட்டி) சரி; எப்படி இருந்தாலும் கூட்டாளியல்லவா, தாங்கள் விட்டுக்கொடுத்துப் பேசலாமா; ஆகையால் தாங்கள் அவருக்காகப் பரிந்து பேசுவது நியாயந்தான். இப்போது தாங்கள் சொன்ன ஒரு சங்கதி முக்கிய மாக என் விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. அவருக்கு இந்த நிமிஷத்தில் இருக்கும் ஞாபகம் அடுத்த நிமிஷத்தில் இல்லை என்று சொன்னிகள் அல்லவா. அது சரியான பேச்சு; எப்படி என்றால், அவருடைய குழந்தைகளை போஷிப்பதற்காக அவர் ஐந்து லட்சம் ரூபாய் என்னிடத்தில் கொடுத்ததாகவும், அப்படிக் கொடுத்த ஆறுமாச காலத்துக்குள் குழந்தைகள் இறந்து போய்விட்ட படியால், அந்தப் பணத்தில் மிகுதி இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார் எனறிர்களல்லவா. அதையும் அவர் ஞாபகப் பிசகாகச் சொல்லி இருக்கிறார். அந்த ஐந்து லட்சம் ரூபாய் வந்த பின் ஆறுமாச காலத்தில் குழந்தைகள் இறந்தது உண்மைதான். ஆனால், அதற்கு முன் அவர் பைத்தியங் கொண்டிருந்த காலத்தில் டாக்டர்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்த போது ஏற்பட்ட கடன்களே அபாரமாக இருந்தன. கடன்கள் இந்த ஐந்து லட்சத் திலிருந்து தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோக மிகுதி