பக்கம்:மதன கல்யாணி-3.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 மதன கல்யாணி சொல்லிக் கொண்டிருந்த கருப்பாயியை மைனர் குத்தினான் என்பதில், இரண்டொரு கேள்விகள் பிறக்கலாம். அவள் தப்பிப் பிழைத்து அந்த பங்களாவில் இருக்கிறாள் என்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது? அப்படித் தெரிந்தாலும், அவள் தனது வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அவன் வந்து குத்த எப்படி சரிபட்டது என்ற கேள்விகள் உண்டாகலாம. அவர்கள் தென்னஞ் சோலைக்குள் கருப்பாயியை அடித்துச் சித்திரவரை செய்ததும், அவன் பிறகு கைகால்களைக் கட்டி அலைகளுக்குள் எறிந்ததும் வேறே எவருக்கும் தெரியாதென்றே அவர்கள் இருவரும் அன்றைய இரவு முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தனர். தங்களிடத்திலிருந்த பத்திரத்தை அபகரித்து வரும்படி கட்டையன் குறவன் கருப்பாயி முதலியோரிடத்தில் கல்யாணியம்மாள் ஏற்பாடு செய்திருக்கிறாள் என்பதை துரைஸானி யம்மாளால் ரகசியமாக அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து அறிந்து கொண்ட மைனரும் பாலாம்பாளும் யோசனை செய்து அன்றைய பகலிலேயே பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து விட்டார்கள் என்பதை நமது வாசகர்கள் அறிந்து கொண்டிருக்கலாம். ஆகவே, அன்றைய தினம் இரவில் அந்தப் பத்திரத்தை மறைத்து வைக்காமல், பாலாம் பாள் வேண்டும் என்றே அதை கட்டையணிடத்தில் கொடுத்து விட்டாள். ஏனெனில், அந்தப் பத்திரம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுப் போனதென்பதைக் கல்யாணியம்மாள் உணர்ந்து கொண்டு அவமானமும் ஏமாற்றமும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தி னால் பாலாம்பாள் சொன்ன யுக்தியின் மேல், அவர்கள் அவ்வாறு செய்தனர். ஆகவே, முதல் நாளிரவில் பத்திரம் அபகரிக்கப்பட்டுப் போனதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படாமல், கல்யாணி யம்மாளைத் தாங்கள் வென்றுவிட்டோம் என்ற நினைவினால் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அதன் பிறகு, மறுநாளைய மாலையில் கருப்பாயி தென்னஞ் சோலைக்குள் ஒளிந்து கொண்டிருந்ததை மேன்மாடத்திலிருந்த பாலாம்பாளே கண்டு கொண்டாள். உடனே அவளது மனதில் ஒரு சந்தேகம் உண்டாயிற்று. பத்திரம் ரிஜிஸ்ட ராகி விட்டதைக் கண்ட கல்யாணியம்மாள் மறுபடியும் வேறே ஏதாகிலும் தந்திரம் செய்கிறாளே என்றும், தன்னையே கொனறு விடும்படி ஒருகால் அவர்களைத் தூண்டி இருப்பாளோ என்றும்