பக்கம்:மதன கல்யாணி-3.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 மதன கல்யாணி சொன்னேன். கோர்ட்டார் உத்தரவுப்படி மேலே சொல்லுகிறேன். கொல்லப்பட்ட பெண்பிள்ளை அம்பட்ட ஜாதியைச் சேர்ந்தவள் ஆனாலும் அவள் தலைகூடிவரம் செய்கிற தொழிலைவிட்டு பிறருடைய பணப் பெட்டிகளை எல்லாம் கூடிவரம் செய்கிற தொழிலைக் கையாடி வந்தவள். அவளை இந்தக் குற்றவாளிகள் இருவரும் சேர்ந்து அடுத்த உலகத்துக்கு அனுப்பியது இந்த உலகத்துக்கு உபகாரமான காரியந்தான். ஏனென்றால் இனியாவது பணப்பெட்டிகள் கூடிவரமாகாமல் மிஞ்சும். இருந்தாலும் நமது பினல்கோர்ட் சட்டமானது மிகவும் பொல்லாதது. அதன்படி உலகத்தில் மனிதரைக் கொல்ல அதிகாரம் பெற்றவர்கள் இரண்டு பேர்கள் தான். எமதருமராஜன் ஒருவன்; இன்னொருவர் செஷன்ஸ் ஜட்ஜி. ஜட்ஜி:- (வேடிக்கையாக நகைத்து) ஜட்ஜிகள் எல்லாம் எமதரும ராஜாக்களானால், நமது நண்பரைப் போன்ற வக்கீல்களை எல்லாம் என்னவென்று சொல்லுகிறது? எமதுதர்கள் என்று சொல்லலாமா? - என்றார். ஜனங்கள் எல்லோரும் நகைக்கிறார்கள். சர்க்கார்வக்கீல்:- (சந்தோஷமாக) ஆம், தடையென்ன! அப்படித் தான் சொல்ல வேண்டும். தருமராஜனுக்கு அநுசரணை யாக இருப்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பதவியா! ஜட்ஜி:- சரி, காலதாமதமாகிறது; குற்றம் கொலைக் குற்றம. மேலே விஷயத்தைச் சொல்லுங்கள். சர்க்கார் வக்கீல்:- (சந்தோஷமாக) இதோ ஆய்விட்டது. முதல் குற்றவாளி அம்பட்டக் கருப்பாயியைக் கொலை செய்த குற்றமும், இரண்டாவது குற்றவாளி கொல்ல முயன்ற குற்றமும் செய்திருக் கிறார்கள். இவர்கள் இன்ன கருத்தோடு இந்தக் கொலையை நடத்தினார்கள் என்ற விஷயத்தை நான் இப்போது எடுத்துச் சொன்னால், அது மிகவும் அதிகமாக விரியும் ஆகையால் அதை ஒரே தடவையாக சாட்சிகளைக் கொண்டே வெளிப்படுத்தி விடுகிறேன். இனி விசாரணையைத் தொடங்குவோம்; முதல் சாட்சி மதனகோபாலன் என்பவரை அழைக்கச் செய்யலாம-எனறு கூறிய வண்ணம் தமது ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டார்.