பக்கம்:மதன கல்யாணி-3.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 மதன கல்யாணி கொண்டாலும், ஒடுகிற ஒட்டத்தில் கூர்மையான பீச்சாங்கத்தியை இடுப்பில் சொருகிக் கொள்ள எப்படி சாத்தியப்படும்? அதை மாத்திரம் தயவு செய்து தாங்கள் சொல்ல வேண்டும். கி. ஜெமீந்தார்:- நாங்கள் போய் இவரைப் பிடித்த போது இரத்தம் கசிந்த கத்தி இவருடைய மடியில் சொருகப்பட்டிருந்தது. ஆகையால், இவர் செடிகளின் மறைவில் ஒடிய போது அதை மடியில் சொருகிக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது. பா. குரோட்டன்:- மனிதன் செய்ய சாத்தியமிலலாத ஒரு காரியத்தை நாம் சாத்தியம் என்று நினைப்பதைவிட இவரைப பிடித்தவர்கள் அந்தக் கத்தியை இவருடைய மடியில் சொருகி வைத்தார்கள் என்று எண்ணிக் கொள்ளுவது நிரம்பவும பொருத்த மான யூகமல்லவா? கி. ஜெமீந்தார்:- நாங்களேன் அப்படிச் செய்ய வேணடும்? எங்களுக்கும் இவருக்கும் பகைமை உண்டா? பா. குரோட்டன்:- கத்தியைச் சொருகி வைத்து இவரைப பிடித்ததி லிருந்து, ஏதோ பகைமை இருப்பதாகத் தான் எண்ண வேண்டி யிருக்கிறது. கி. ஜெமீந்தார்:- நான் மாத்திரம் சொல்லவில்லையே! என்னோடு வந்த எத்தனையோ மனிதர்களும் இருக்கிறார்களே! அவர்கள் எல்லோரும் கண்ணாரக் கண்ட விஷயந்தானே இது. பா. குரோட்டன்:- அவர்கள் எல்லோரும் தங்களுடைய வேலைக் காரர்கள் அல்லவா? & கி. ஜெமீந்தார்:- ஆம்; வேலைக்காரர்கள் தான். அவர்களோடு ஒரு போலீஸ் ஜெவானும் இருந்தானே! பா. குரோட்டன்:- அதிருக்கட்டும்; அந்த இருட்டில் இந்த மைனரை நீங்கள் பிடித்துக் கொண்டீர்களே. அப்போது இவரை முதலில் யார் பிடித்ததென்பது தங்களுக்கு நினைவிருக்கிறதா? கி. ஜெமீந்தார்:- எல்லோரும் கும்பலாகப் போய்ப் பிடித்துக் கொண்டோம். ஆகையால் இன்னார் தான முதலில பிடிததாாகள என்று சொல்ல முடியாது.