பக்கம்:மதன கல்யாணி-3.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 மதன கல்யாணி பட்டன; அந்த முகர் என்னுடைய கைப்பெட்டியில் எப்போதும் பூட்டிவைக்கப் பட்டிருப்பது. அந்த முகரினால் அரக்கு முத்திரைகள் வைக்கப்பட்ட பின், அந்த உறையை எடுத்துக் கொண்ட மாஜிஸ் டிரேட்டும், அவரோடு சப் இன்ஸ்பெக்டரும் போய்விட்டார்கள்; நான் அதன் பிறகு பிணத்தைக் கொளுத்தும்படி அனுப்பி விட்டேன். எனக்கு இவ்வளவு தான் தெரியும் - என்று சாஜன் துரை வாக்குமூலம் கொடுத்தாா. அப்போது விசாரணை குமாஸ்தா, ஜட்ஜிகளின் மேஜை மீதிருந்த ஓர் உறையை எடுத்து சர்ஜனிடத்தில் காட்ட, அது தான் வாக்குமூலமிருந்த உறையென்றும், அரக்கு முத்திரைகள் வைக்கப் பட்டபடி சரியாகவே இருக்கின்றன என்றும் அவர் கூறினார். உடனே ஜட்ஜி குரோட்டன் துரையின் முகத்தைப் பார்க்க, அந்தக் குறிப்பை உணர்ந்து கொண்ட பாரிஸ்டா புன்னகை தவழ்ந்த முகத்தோடெழுந்து, "பெருமை வாய்ந்த நமது நண்பரான சர்ஜன் துரை அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நாம் வேதவாக்கியமாக மதிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் ஆகையால், அதில சந்தேகப்பட்டு நாம் கேட்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லாவிட்டாலும் தேகக்கூறுகளை அவ்வளவாக அறிந்து கொள்ளாத நம் போன்ற சாதாரண ஜனங்களுக்கு ஏற்படும் இரண்டொரு சந்தேகங்களை நாம் கேட்டு அவருடைய அபிப்பிரா யத்தை உணர்ந்து கொள்ளுவதைப் பற்றி அவர் ஆயாசப்பட மாட்டார் என்பதை நான் உறுதியாக நம்பி, இரண்டொரு சினன சங்கதிகளைக் கேடக விரும்புகிறேன்" என்று நயமாகப பீடிகை போட்டுக் கொண்டு நின்றவராய் சர்ஜன் துரையை நோக்கி, "ஐயா! அந்தக் கிழவிக்கு எதனால் மரணம நேர்ந்ததென்று தாங்கள் அபிப பிராயப்படுகிறீர்கள்?" என்றார். சர்ஜன்துரை:- கூாமையான நீண்ட ஆயுதம் மார்பில் குத்தப்படட தால் மரணம் நேர்ந்ததென்று நான் அபிப்பிராயப்படுகிறேன். பா. குரோட்டன்:- மன்னிக்க வேண்டும். என்னுடைய கேளவி அதல்ல. அவளுடைய தேகத்தில் எத்தனையோ கருவிகள இருக்கின்றனவே; அவைகளுள், எதன் சேதத்தினால் அவளுடைய உயிர் நின்றது?