பக்கம்:மதன கல்யாணி-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மதன கல்யாணி வண்ணம் தமது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். ஒரே வெடியில் இரண்டு பறவைகளைச் சுடுவது போல, பாரிஸ்டர் குரோட்டன் துரை தமது அபார தந்திரத்தினால் சர்ஜன் துரையின் வாக்குமூலத் தைக் கெடுத்ததன்றி, அடுத்தாற் போல வரவிருந்த மாஜிஸ்டி ரேட்டு வாசிக்கப் போகும் கருப்பாயியினது வாக்குமூலத்தையும் உபயோகமற்றதாக்கி விட்டதைக் கண்ட ஜனங்களும வக்கீல் களும் மற்றவரும் கரைகடந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, மகா விந்தையான அந்த வழக்கு எப்படித் தான் முடியுமோ என்ற ஆவல் கொண்டவராய், முன்னிலும் அதிக சுவாரஸ்யமாக அந்த விசாரணையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். அடுத்தாற் போல, பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டு துரை சாட்சிக் கூண்டினமேல் வந்து நின்று பிரமாணம் செய்து, அடியில் கண்ட படி வாக்குமூலம் கொடுக்கலானார்: நான் எழும்பூரில் உள்ள சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டு. மூன்றாவது நாளிரவு சுமார் 8-மணி சமயத்தில், ராயப்பேட்டை வைத்திய சாலையில் இருந்து மைலாப்பூர் சப் இன்ஸ்பெக்டரும், சர்ஜன் துரையவர்களும் டெலிபோன் மூலமாக என்னைக் கூபபிட டார்கள். நான் என்னுடைய மோட்டார் வண்டியில் ஏறி உடனே போனேன். ஒரு கிழவி கத்தியால குத்தப்பட்டு மரணகாலத்தில இருந்தாள். அவள் வாக்குமூலம் கொடுக்க விரும்பினாள் ஆகையால் சப் இன்ஸ்பெக்டரையும் சர்ஜன் துரையையும மாத்திரம் அவ்விடத்தில் வைத்துக் கொண்டு நான் தனியாக இருந்து அந்தக் கிழவி சொன்னதை எழுதிக் கொண்டேன், இடையிடை யில், அவள் பேசமாடடாமல் மயங்கி மயங்கிச் சோர்ந்து படுத்திருந்து மறுபடியும் விழித்துப் பேசிக் கொண்டே இருந்தவள் வாக்குமூலம் முடியும் சமயத்தில மரணாவஸ்தைப்பட்டு இறந்து போய் விட்டாள். அவள் கொடுத்த வாக்குமூலத்தில நான கையெழுத்து வைத்து, சப் இன்ஸ்பெக்டர், சர்ஜன் துரை ஆகிய இருவருடைய கையெழுத்துகளையும் பெற்றுக் கொண்டு, அதை உறைக்குள் போட்டு ஒட்டி மேலே அரக்கு முத்திரை வைத்து, அதையும் போலீசாரால் அனுப்பப்பட்ட மற்ற தஸ்தாவேஜூ களையும் சேர்த்து ஏற்கனவே இந்தக் கச்சேரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன் - என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/162&oldid=853296" இலிருந்து மீள்விக்கப்பட்டது