பக்கம்:மதன கல்யாணி-3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 163 அந்த செமீந்தாரம்மா மாரமங்கலத்துலெ இருந்து தேனாம்பேட்டெக்கி வந்திருந்தாவ. நான் ஒருநா அந்த அம்மா தனியா இருந்தப்ப நேருலெ போயி, "அம்மா! நான் யாருன்னு ஒங்கிளுக்குத் தெரியிதா? இப்ப நான் ஏளெயாப் பூட்டேன்; எனக்கு ஏதாச்சும் பணங்குடுத்து ஒத்தாசெ பண்ணுங்க" இன்னு கேட்டேன். அந்த அம்மா நொம்ப முறுக்காகப் பேசி என்னெ அதட்டி, "நீ யாருடீ? இஞ்சே ஏண்டி வந்தே? போ வெளியே; அரிசி குடுக்கச் சொல்றேன்; வாங்கிக்கினு போ" இன்னு சொல்லி என்னெத் தொரத்தினாங்க. எனக்கு ஒடனே கோவம் வந்துடிச்சு ஒடனே நான் உள்ளத்தேச் சொல்லிப்புட்டேன். எம்மவனெத்தான், சுட்டு அடையாளம் உண்டாக்கிக் குடுத்ததுன்னும், அந்த அம்மா நான் கேக்கற போதெல்லாம் எனக்குப் பணம் குடுக்காமெப் போனா அந்தச் சங்கதியெ வெளிப்படுத்திப் புடுவேனுன்னும் நான் சொன்னேன். அவுங்க ஒடனே பொன்னம்மாளெக் கூப்பிட்டு விசாரிக்க, அவளும் நெசந்தானுன்னு ஒப்பிக்கினா; தான் என்னாத்துக்காவ அப்பிடிச் சேஞ்சாங்கற நாயத்தையும் எடுத்துச் சொன்னா. அதுக்கு மேலெ அந்த அம்மா பயந்து போனாங்க. நான் அந்த ரவசித்தெ வெளியே சொல்லாமெ இருந்தா அப்பப்ப பணம் குடுக்கறதாவச் சொல்லி எனக்குப் பணம் குடுத்து அனுப்பிச்சாங்க; பன்னண்டு வருசம் சொந்தபுள்ளெயின்னு வளத்த பொற வாலெ, அதெத்தள்ளறது சரியல்லவுன்னு அவுங்களும் வெளிக்கு அதெக் காட்டாமெயே வச்சிருந்தாங்க. நான் அடிக்கடி போயி அந்தம்மாளெ மெரட்டி நூறு எரநூறு புடிங்கியாந்துடுவேன்; அப்பிடியே இதுவரெயிலெ காலந் தள்ளிப்புட்டேன். என்னோடெ மவனெ நான் இப்ப ஏளெட்டு வருசமாப் பாக்கல்லெ; அவன் பெரியவனா வளந்து பூட்டானல்ல: அதுனாலெ அவனோடெ அடயாளமும் தெரியல்லெ; பத்துப் பதினஞ்சு நாளெக்கி மின்னெ ஒருநா அந்தப் பையன் எங்க வூட்டுக்கு வந்து பக்கத்துலெ இருந்த வாலாம்பா இங்கற நாடவக்காரியெ வசப்படுத்திக் குடுக்கணுமின்னு கேட்டான். நான் ஆவட்டுமுன்னு சொல்லி ராத்திரி வரச் சொன்னேன். கட்டெயன் கொறவன் வந்து அவனெக் கொன்னு போட்டுட்டு அவங்கிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/167&oldid=853301" இலிருந்து மீள்விக்கப்பட்டது