பக்கம்:மதன கல்யாணி-3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 165 செமீந்தாருகிட்டவும் பையன் கிட்டவும் சொல்லிக்கினு இருந்த சமயத்துலெ எம்மவன் உள்ளற ஒடியாந்து எம்மாருலெ குத்திப்புட்டு ஒடி - என்று அறைகுறையாக நிறுத்தப்பட்டிருந்த மரணாந்த வாக்கு மூலத்தை மாஜிஸ்டிரேட்டு துரை படித்துக்காட்டி, "இவ்வளவு தான் அவள் சொன்னாள். உடனே அவளுக்கு வாய் வழியாக சுவாசம் வரத்தொடங்கியது. அவள் கொஞ்ச நேரத்தில் இறந்து போய்விட்டாள்" என்றார். சர்க்கார் வக்கீல்:- மறுநாள் காலையில் தாங்கள் இந்தக் கேஸ் சம்பந்தமாக எங்கேயாவது போயிருந்தீர்களா? மாஜிஸ்டிரேட்:- ஆம்; போலீசாருடைய வேண்டுகோளின்படி ஆலந்துரில் உள்ள அநதக் கிழவியின் வீட்டுக்குப் போனோம். எங்கள் முன்னிலையில் கிராமமுன்சீப்பு ஆள்களை அழைத்து அவள் குறித்த சுவரை இடித்துப் பார்க்கச் செய்தார். அந்த இடத்தில் ஒரு மொந்தை இருந்தது. அதன் வாய் மூடப்பட்டிருந்தது. அதை விலக்கிப் பார்க்க உள்ளே ஒரு காகிதத்துண்டு கிடந்தது அதை எடுத்துப் பார்த்தேன் அதில் தமிழில் ஏதோ ஒரு மேல்விலாசம் எழுதப்பட்டிருந்தது. அந்தக் காகிதம் அநேக வருஷங்களுக்கு முன் வைக்கப்பட்டது போலப் பழுத்து மடகிப் போயிருந்தது. அதில் இருந்த விலாசத்தை சப் இன்ஸ்பெக்டர் குறித்துக் கொண்டார். நான் உடனே அந்த மொந்தையையும் காகிதத்தையும் இந்தக் கேசின் ரிகார்டுகளுக்கு சம்பந்தப்படுத்தி இந்தக் கோர்ட்டாருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். சர்க்கார் வக்கீல்:- அந்த விலாசத்தில் இருந்த பெயர் முதலியவை தங்களுக்கு நினைவிருக்கின்றனவா? மாஜிஸ்டிரேட்:- இல்லை. சர்க்கார்வக்கீல்:- (ஜட்ஜிகளின் மேஜை மீதிருந்த அந்தத் துண்டுக் காகிதத்தை வாங்கிக் காட்டி) இதைப் பாருங்கள். இந்தக் காகிதந் தானே மொநதைக்குள் இருந்தது? மாஜிஸ்டிரேட்:- ஆம்; இதுதான் - என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/169&oldid=853303" இலிருந்து மீள்விக்கப்பட்டது