பக்கம்:மதன கல்யாணி-3.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


166 மதன கல்யாணி அவ்வாறு மாஜிஸ்டிரேட்டினால் படிக்கப்பட்ட வாக்குமூலத்தில் கருப்பாயியால் வெளியிடப்பட்டிருந்த அதியாச்சரியகரமான ரகசியங்களை எல்லாம் கேட்ட ஜட்ஜிகளும், ஜூரிமார்களும், வக்கீல்களும், சகலமான ஜனங்களும் அளவிறந்த வியப்பும் திகைப்பும் பிரமிப்புமடைந்து கொஞ்ச நேரம் வரையில் அப்படி யப்படியே ஸ்தம்பித்துப் போயிருந்தனர். பசவண்ண செட்டியாரே கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் என்பதைக் கண்டவுடன் மயங்கி சற்றுமுன் நாற்காலியில் சாய்ந்த சிவஞான முதலியார் சிறிது தெளிவடைந்து கருப்பாயியினது வாக்குமூலத் தைக் கேட்டுக் கொண்டு வந்தார். மைனர் அம்பட்டக் கருப்பாயி யின் மகன் என்பதும், கல்யாணியம்மாள் அந்த விஷயத்தைத் தம்மிடத்தில்கூட வெளியிடாமல் அதுகாறும் மறைத்து வைத்திருந் தாள் என்பதும் தெரியவே, சிவஞான முதலியார் மிகுந்த கலக்கமும் குழப்பமும் அடைந்து கனவு நிலைமையில் இருப்பவர் போலச் சிறிது நேரம் வரையில் உணர்வற்று முட்டுக்கல் போல உட்கார்ந் திருந்தார்; ரகசியம் அவ்வளவு தூரம் வெளியான பிறகு மைனர் அம்பட்டச்சியின் பிள்ளையல்ல என்று தாம் ருஜூப்பிக்க முடியா தென்பது அவருக்குத் தெளிவாக விளங்கியது. அவன் உண்மை யில் இன்னான் என்ற விஷயம் அவ்வாறு கச்சேரியில் பகிரங்கமான பிறகு அவனுக்கு அந்த சமஸ்தானமும் ஜெமீந்தார் என்ற பட்டமும் நிலையாவென்பதை உடனே யூகித்துக் கொண்ட முதலியார் தாமும் குரோட்டன் முதலிய பாரிஸ்டர்களும் அவ்வளவு பாடு பட்டு அவனை மீட்பது அநாவசியம் என்று நினைத்தவளாய், பாரிஸ்டர் குரோட்டன் துரையின் காதோடு தமது காதை வைக்க, "சரியம் மிஞ்சிப் போய்விட்டது. இவனை நாம் கொலைக் குற்றத்தி லிருந்து தப்ப வைத்தாலும், இவன் அம்பட்டச்சியின் மகன் என்ற சங்கதியை நாம் பொய்யாக்க முடியாது; ஆகையால் இவனைத் தப்ப வைத்தும் உபயோகமில்லை. நீங்கள் சும்மாவிட்டு விடுங்கள். இவனுடைய தலைவிதியின்படி முடியட்டும். இனி நமக்குக் கவலை இல்லை" என்றார். அதைக் கேட்ட பாரிஸ்டர் குரோட்டன் துரை தமக்குள்ளாகவே மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அவரது கட்டணம் முன் பணமாகவே கொடுக்கப்பட்டுப் போனமையால்,