பக்கம்:மதன கல்யாணி-3.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189 இருப்பதைவிட இறப்பதே நன்மையானதென்று அவன் உறுதி செயது கொண்டு ஜட்ஜியை நோக்கி, "ஜட்ஜி துரைகளே! நான் இந்தக் குற்றத்தைச் செய்தது வாஸ்தவந்தான். சாட்சிகள் சொன்ன தெல்லாம் நிஜமான சங்கதிகளே" என்று மிகவும் விசனத்தோடு கலங்கிக் கூறினான். அவனது பரிதாபகரமான நிலைமையைக் கண்ட ஜனங்களினது கண்களில் கண்ணி மளமளவென்று உதிர்ந்தது. "ஐயோ பாவம்' என்று சிலர் தமது அநுதாபத்தை வெளியிட்டனர். அப்போது ஜட்ஜி மறுபடியும் மைனரைப் பார்த்து மிகுந்த அநுதாபமும், இரக்கமும் தோன்ற, "ஐயா! இதை விளையாட்டாக நினைத்துப் பேசாதீர். இப்படி ஒப்புக் கொள்வதால், உமக்கு எப்படிப்பட்ட தண்டனை பலிதமாகும் என்பதை நீர் எண்ணி உண்மையாகப் பேசும்; பயந்து கொண்டு உளறவேண்டாம். நீர் இந்தக் குற்றத்தை உண்மையில் செய்யாமலிருந்தால் செய்யவில்லை என்று சொல்லும். உமக்கு சாட்சிகளிருந்தால் அவர்களுடைய ஜாப்தா ஒனறு கொடும. அவர்களை நாங்கள் வருவித்து விசாரித்து அதன் பிறகு முடிவு செய்கிறோம. உமக்கு வக்கீல் சக்தியில்லாவிட்டால், சர்க்கார் செலவில் நாங்கள உம்முடைய பக்கத்தில் பேச ஒரு வக்கீல் அமர்த்துகிறோம்" எனறு மிகவும் அன்பாகவும் விசனமாக வும் கூறினார். மைனர் அப்போதும் பிடிவாதமாகப் பேசத் தொடங்கி, "இல்லை இல்லை. நானே அவளை உண்மையில் கொன்றவன். எனக்கு சாட்சிகள் ஒருவருமில்லை. கொலைக் குற்றம் செய்தவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தே நான் பேசுகிறேன்" என்று அழுத்தமாகக் கூறினான். அதைக் கேட்ட ஜட்ஜி, மைனருக்குப் பக்கத்தில் தத்தளித்துத் திருட்டு விழிவிழித்து மகாசங்கடமான நிலைமையில் நின்ற பாலாம் பாளை நோக்கி, "ஏ பெண்னே! நீ என்ன சொல்லுகிறாய்? நீயம் இந்த மனிதரும் சேர்ந்து கருப்பாயியை அடித்து வதைத்துக் கட்டி சமுத்திரத்தில் போட்டது கொலை செய்ய முயற்சித்த குற்றமாகிறது. அதை நீ செய்ததுண்டா இல்லையா?" என்றார். பாலாம்பாள், "நான் எவ்விதக் குற்றமும் செய்யவில்லை" என்று உடனே கூறினாள். ஜடஜி, "உனக்கு சாட்சிகள் யாராவது இருந்தால் அவர்களுடைய விலாசத்தைச் சொல்" என்றார்.