பக்கம்:மதன கல்யாணி-3.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215 பரப்பின் மேல் இருவரும் விழுந்தமையால் மரிக்காமல், மூச்சடை பட்டுக் கிடக்கிறார்கள் என்றும் கூறினார்கள். அந்த விவரங்களை எல்லாம் கேட்ட கோமளவல்லியம்மாள் அது கனவோ நினைவோ என்று சந்தேகித்து, அந்த விவரங்களை உண்மை என நம்பாதவ ளாகத் தனக்கெதிரில் வைக்கப்பட்டிருந்த தமிழ் வாக்குமூலங்களை யும், தீர்மானத்தையும் எடுத்துப் படித்துப் பார்த்து, தாதிகள் சொன்ன விவரங்கள் எல்லாம் உண்மையானவை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டாள். அப்போது அவளது வியப்பும், பிரமிப்பும், சந்தோஷமும் அளவிலடங்காதனவாக இருந்தன. மதனகோபாலனே தனது சொந்த சகோதரன் என்பதை உணரவே, அவளது மனத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கரைகடந்து பொங்கி எழுந்தன. அவனைத் தான் எப்போது பார்க்கக் கிடைக்கும் என்ற ஆவலும், அவனும் தனது தாயும் உயிர் தப்பிப் பிழைக்க வேண்டுமே என்ற பெருத்த கவலையும் விசனமும் பெருகி அவளை மிகவும் சஞ்சலப்படுத்தி வதைத்துக் கொண்டிருந்தன. அவளும் ஏனைய பணிப் பெண்டீரும் தங்களது ஆகாரத்தையா வது, தூக்கத்தையாவது, களைப்பையாவது கவனியாமல் அரும் பாடுபட்டு கல்யாணியம்மாளுக்கு ஒற்றிடம் கொடுத்துக் கொண்டு, கச்சேரியில் நடந்த விசாரணை தீர்ப்பு முதலியவற்றின் விவரங் களை எல்லாம் இடையிடையே பேசிக் கொண்டும், மிகுந்த ஆவலும் கவலையும் நிறைந்தவராக அந்த இரவைக் கழித்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறு நெடுநேரமாயிற்று. மதனகோ பாலன் உறுதியான சரீரத்தை உடையவனாதலால் அவனுக்கு அதிசீக்கிரத்தில் தெளிவு ஏற்பட்டது. கல்யாணியம்மாளோ இயற்கையிலேயே மிகவும் நுட்பமான தேகத்தைப் பெற்று, அதிக உழைப்பின்றியே இருந்து வந்தவள் சென்ற சில நாட்க்ளாக, அந்தச் சீமாட்டிக்கு நேர்ந்த பெருத்த பெருத்த இடர்களின் கவலையினால், உண்ணாமலும் கண்ணுறங்காமலும் இருந்து முன்னிலும் அதிகமாக மெலிந்து தளர்வடைந்தவள்; கடைசியில் தனது மானம் போய்விட்டதே என்ற பெருத்த பீதியும், தான் அம்பட்டச்சியின் பிள்ளையை மைனராகச் செய்து வைத்திருந்தது பற்றித் தனக்கு சிறைச்சாலை வாசம் முதலிய ஏதேனும் சர்க்கார் தண்டனை ஏற்படுமோ என்ற பேரச்சத்தினாலும், உலப்பப்பட்ட