பக்கம்:மதன கல்யாணி-3.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


216 மதன கல்யாணி வளாகக் கீழே வீழ்ந்தவளாதலால், அந்த அம்மாளது உணர்வைத் திருப்புவது மிகவும் கடினமாக இருந்ததன்றி, அதற்கு அதிக நேரமும் பிடித்தது. ஆகவே, கல்யாணியம்மாள் தெளிவு பெற்றுக் கண்களைத் திறந்த போது விடியற்கால சமயமாகிவிட்டது. அவள் கண்களைத் திறந்து கொண்டு மருண்டு மருண்டு நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள். அவளுக்கு எல்லாம் குழப்பமாக இருக்கிறது. தானிருந்த இடம் எதுவென்பதும், அப்போது இருக்கும் இடம் எதுவென்பதும் தெளிவுபடாமல் தான் கனவு காண்பதாக அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். அந்த நிலைமையில தாதிகள் சுடச்சுடக் கொழுமோர் கொடுத்துப் பருகுவிக்க, அந்த அமிர்தம் தேகத்தில் சம்பந்தப்படவே கல்யாணியம்மாள் அதிசீக்கிரத்தில் குணமடைந்து, "நான் எங்கே இருக்கிறேன்? உயிரோடிருக்கிறேனா? இறந்து போய்விட்டேனா?" என்று வினவிய வண்ணம் மெதுவாக எழுந்து உட்கார்ந்து திணடில் சாய்ந்து, கோமளவல்லியையும், மற்ற தாதிகளையும் நோக்கு கிறாள்; தனது கண்களை நம்பாமல் கசக்கிவிட்டுக் கொள்ளுகிறாள்; தனது உடம்பில் ஏதேனும் காயங்கள் இருக்கின்றனவோ என்று பார்த்துக் கொள்ளுகிறாள. அப்போது கோமளவலலியம்மாள தனது தாய்க்கருகில் உட்கார்ந்து, அன்பாக அணைத்து, "அம்மா! நீங்கள் நம்முடைய பங்களாவிலே தானிருக்கிறீர்கள். பயப்பட வேண்டாம். என்னவோ நாங்கள் எல்லாம் செய்த பூஜா பலத்தினால் நீங்கள் இந்தப் பெருத்த கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தீர்கள்" என்றாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் முனனிலும் அதிகக் குழப்பமும் கலக்கமும் அடைந்து, "என்ன இது ஆச்சரியமாக இருக்கிறதே! நான் தம்புசெட்டித் தெருவிலிருந்த வீட்டிலிருந்து பாதாளத்தில் விழுந்தவள் எப்படித் தப்பினேன்! உடம்பில் ஓர் அடிகூடப் பட்டதாகத் தெரியவில்லையே! நான் பூமியில் விழும் முன் யாராவது என்னைப் பிடித்துக் கொண்டார்களா? அங்கே இருந்து நான் இவ்விடத்துக்கு எப்படி வந்தேன்" என்றாள். உடனே கோமளவல்லியம்மாள், "அம்மா! நீங்கள் கீழே தான் விழுந்து விட்டீர்கள். ஆனால் அந்த வீட்டின் கீழ்கட்டு பஞ்சுக்