பக்கம்:மதன கல்யாணி-3.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235 உலகத்தில் என்னென்ன காய்கறி சாதங்கள் இருந்தனவோ அவை அனைத்தும் மாதுரியமான பதார்த்தங்களாக மாறி இலைகளில் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தன. உலகத்தில் என்னென்ன பகூடின பலகாரங்கள் செய்ய மனிதர்கள் அறிந்திருக்கிறார்களோ அத்தனையும் அந்த இலைகளில் காணப்பட்டன. கனி வர்க்கங்கள் இனி உலகத்தில் வேறே இல்லை என்று எல்லோரும் சொல்லும் படியாக சகலமான பழங்களும் பரிமாறப்பட்டிருந்தன. சமையல் செய்வதற்கு ஐம்பது பரிசாரகர்களும், பரிமாறுவதற்கு நூறு பரிசாரகர்களும் நியமிக்கப்பட்டிருந்தமையால், அத்தனை முஸ்தீபு களும் அன்றைய காலை ஒன்பது மணிக்குள் முடிவுற்றிருந்தன. அத்தனை பரிசாரகர்களும் ஒருவர் பின் ஒருவராக வேஷங்கள் போல வந்து நெய்யையும், பாலையும், தேனையும், பாயாசத்தை யும், தயிரையும் மழை போலப் பொழிந்து, பத்துவகைக் குழம்பு, இருபதுவகைப் பச்சடி, முப்பதுவகைச் சித்திரான்னம், ஐம்பது வகை பகூடிணபலகாரம், நூறுவகைக் கறிகள் முதலிய சகலமான பக்குவ பதார்த்தங்களையும் திரும்பத் திரும்பக் கொணர்ந்து சொரிந்து, அது அசுர போஜனமோ என யாவரும் நினைத்து வியப்புற்று, "வயிற்றில் இடமில்லை; போதும் போதும்" என்று கதறிக் கைகளை விரித்து இலையின் மேல் குப்புறப் படுக்கும்படி செய்து, அந்த விருந்தை எல்லோரும் தங்களது ஆயுட் காலம் வரையில் மறக்காமல் இருக்கும்படி செய்துவிட்டனர். அவ்வாறு அந்த அமோகமான விருந்து நடைபெற்ற பின் எல்லோரும் இன்னொரு பெருத்த மண்டபத்தில் வரிசையாகப் போடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சாய்மான சோபாக்களில் உட்கார வைக்கப்பட்டனர். பெண்பாலார் யாவரும், அண்டையில் மறைவாக இருந்த ஒரு விடுதியில் கூடி உட்கார்ந்திருந்தனர். அவர்களுள் கல்யாணியம்மாள், கோமளவல்லி, மோகனாங்கி, கண்மணி முதலியோரும் விருந்தினரான பல பெருமாட்டிகளும் நிறைந்திருந்தனர். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், சிவஞான முதலியார், மதனகோபாலன் முதலியோர் ஒன்றாக இருந்தனர். அப்போது விருந்தினர்க்கெல்லாம் பன்னிரும், கலவை கஸ்தூரிகள் முதலியவை நிறைந்த பரிமளகந்தமும், வாசனைத் தாம்பூலாதிகளும் சம்பிரமமாக