பக்கம்:மதன கல்யாணி-3.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 மதன கல்யாணி என்று பெருங் கூச்சலிட்டுத் துள்ளிக் குதித்து, "அடே! என்னெ இப்பிடித்தான் அடிப்பியாடா? நான் அம்பட்ட நாயிதாண்டா! நீ யாரு தெரியுமாடா? இந்த அம்பட்ட நாயோடே வவுத்துலே பொறந்த புள்ளெடா ஒன்னே நான் செமீந்தாராக்கினேன்டா! நீ எனக்கும் ஒரு கொறவனுக்கும் பொறந்த இருபொறப்பு நாயிடா! அடே! நாம் மாத்ரம் உசிரோடே இருந்தேனுன்னா இன்னமே நீ செமீந்தாரா இருக்க உடமாட்டேண்டா! இன்னெக்கி எட்டா நாளைக்குள்ளற அந்த நெசமான செமீந்தாரு எங்ங்னே இருக்கிறா னுன்னு கண்டுபுடிச்சு, ஒம் வாயிலே மண்ணப் போட்டுக் குத்த றேண்டா, அப்புறம் இந்த வங்களாவும் பாலாம்பாளும் போற எடந் தெரியாது.டா" என்று கூறிக் கதற, அந்தக் கூக்குரலைக் கேட்ட பாலாம்பாளும் மைனரும் முன்னிலும் அதிகமான ஆங்காரங் கொண்டு தடிகளால் அவளை மேன்லுேம் அடிக்க, அவள் கடைசி யாக மயங்கி ஸ்மரணை தப்பிக் கீழே விழுந்து விட்டாள். அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் அவர்களது கோபம் தணிவடைந்தது. கிழவி இறந்து போய்விட்டாள் என்று நினைத்துக் கொண்ட இருவரும் அவளது பிணத்தை என்ன செய்வதென்று யோசனை செய்தனர். மைனர் அந்தத் தோட்டத்திலேயே ஒரு குழி தோண்டி அதற்குள் அதைப் போட்டுப் புதைத்துவிடலாம் என்றான். பாலாம்பாள் அப்படிச் செய்தால், பின்னால் எவராவது அதை கண்டு கொண்டால் சந்தேகம் நம்மீதே ஏற்படும் என்று சொல்லி, அதன் கைகளையும் கால்களையும் கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிட்டால், அந்த ராத்திரிக்குள் அந்தப் பிணத்தை மீன்கள் தின்று விடும் என்று கூறினாள். மைனர் அதை ஒப்புக் கொண்டு அவளது கைகால்களை எல்லாம் கட்டுவதற்காக கயிறுகள் கொண்டு வரும்படி பாலாம்பாளை அனுப்ப, அவள் போய் உடனே எடுத்து வந்தாள். மேலே விவரிக்கப்பட்ட விபரீதச் சண்டை நடந்த சமயத்தில் அங்கே வந்து மதிட்சுவரின் வெளிப்புறத்தில் நிறை வண்ணம் அந்த அபூர்வமான சம்பாஷணைகளையும் அடிதடி சண்டையை யும் உணர்ந்து கொண்ட மதனகோபாலன், அளவிறந்த திகைப்பும் திகிலும் நடுக்கமும் அடைந்தவனாய், அப்படியே மதிலோடு