பக்கம்:மதன கல்யாணி-3.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


238 மதன கல்யாணி போலவே மதித்து வருகிறார்கள். சுமார் 15, 16-வருஷங்களுக்கு முன் ஒரு பெரியவர் அந்த சமஸ்தானத்தின் ஜெமீந்தாராக இருந்தார். அவர்களுடைய தம்பியின் குமாரன் சின்னதுரை என்பவன் கிழவரிடத்தில் பகைமை கொண்டு, சைதாப் பேட்டைக்குப் பக்கத்திலிருக்கும் ஈக்காட்டுத்தாங்கல் என்னும் ஊரில் உள்ள கட்டையன் என்னும் ஒரு குறவனைத் துண்டி, கிழவருடைய ஆண் குழந்தையைக் கொன்றுவிடும்படி ஏற்பாடு செய்ய. அவன் குழந்தையை எடுத்துப் போய், மைசூர் சின்னையா நாயுடுவின் நாடகக் கம்பெனியில் பிடில் வித்துவானிடத்தில் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு குழந்தையைக் கொடுத்து விட்டு வந்து தான் அதைக் கொன்றுவிட்டதாக சின்னதுரையிடத்தில் சொல்லி விட்டான். அந்தக் குழந்தையும், பிடில் வித்துவானுடைய சொந்தக் குழந்தையான ஒரு பெண்ணும் தகப்பன் இறந்த பிறகு அநாதை யாகிய நம்முடைய நண்பரான கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய போஷணையில் வந்து சேர்ந்து விட்டார்கள். புத்திரன் காணாமற் போன சோகத்தினால் மாரமங்கலம் ஜெமீந்தாரான பெரியவர் நோயாக விழுந்துவிட்டார். அவர்களுடைய சம்சாரம் இந்த ஊருக்கு வந்து குழந்தையைத் தேடச் செய்ய, அது எங்கும் அகப்படாமை யால், ஒரு வேலைக்காரி ஆலந்துரில் உள்ள ஒரு அம்பட்டப் பெண் பிள்ளையின் குழந்தையைக் கொண்டு வந்து மோசடியாகக் கொடுத்துவிட்டாள். அந்தக் குழந்தை வளர்ந்து இதுவரையில் மைனராக இருந்து துன்மார்க்கங்களிலும் இறங்கிக் கடைசியாக, தனது சொந்தத் தாயையே குத்திவிடவே, அதிலிருந்து ரகஸியங்கள் எல்லாம் வெளியாகிவிட்டன. ஜெமீந்தாருடைய சொந்தப் பிள்ளை யான மதனகோபாலன் என்பவர் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று தினம் தம்முடைய தாயிடம் வந்து சேர்ந்தார். நேற்றைக்கு முந்திய நாள், இந்த விஷயங்கள் எல்லாம் ஹைகோர்ட்டில் வெளியாகி எங்கும் பரவியிருப்பதால், அதைப் பற்றி நான் அதிகமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. அந்த உண்மை யான குமாரரே இதோ இருப்பவர்; என்னுடைய நண்பரான கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் இவரைத் தமது அபிமான புத்திரராக மிகவும் வாஞ்சையோடு வளர்த்தவர் ஆதலால், அந்த சந்தோஷத்தைப் பாராட்டும் பொருட்டு உங்களை எல்லாம்