பக்கம்:மதன கல்யாணி-3.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245 பலவாறு துற்றலாயினர். சிலர், "மோசக்கார வக்கீல்" என்றனர். சிலர் "சோதாப்பயலை உதையுங்கள்" என்று அதட்டிக் கூறினர். வேறு சிலர், "திருட்டு நாயைக் கட்டி வைத்து செருப்பாலடியுங்கள்" என்றனர். மற்றும் சிலர், காறி எச்சிலை சிவஞான முதலியாரது தலையில் உமிழ்ந்தனர். முரட்டாள்களாக இருந்த வேறே சிலர் நெருங்கி நின்று, அவரை உபத்திரவிக்கத் தொடங்கினர். ஒருவன் அவரது தலைப்பாகையைத் தட்டிவிட்டான். வேறொருவன் அவரது விலாவில் ஒரு குத்துவிட்டான். பெரும்பாலோரான விருந்தினர், "வேண்டாம்; வேண்டாம். அவரை ஒன்றும் செய்யாதீர்; அவர் என்ன சமாதானம் சொல்லுகிறார் என்று கேட்போம். அவசரப்படாதீர்; அவர் என்ன உத்தரம் சொல்லுகிறார் என்று கேட்போம். பொறுங்கள்" என்று அதட்டிக் கூற, உடனே சிவஞான முதலியார் கண்ணிர் விடுத்தவராய் எழுந்து நின்று, "என்னை ஏன் அநாவசியமாக இப்படி உபத்திரவிக்கிறீர்கள்? இந்த அண்ணாமலை முதலிக்கும் எனக்கும் பகையுண்டு. அதனால் இவன் என்மேல் இல்லாத பொல்லாத பொய்யை எல்லாம் சொல்லுகிறான். அருணகிரிப் பிள்ளையும் நானும் ஆதியில் ஒரு வீட்டிலிருந்து சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போய் விட்டோம், அவரும் இவனும் சேர்ந்து கட்டுப்பாடாக இப்படிப் பேசுகிறார்கள். குழந்தைகள் இறந்து போனது நிஜமே. சைதாப் பேட்டையில் யூனியன் ஆபீசில் இருக்கும் ஜனன மரணப் பதிவு ரிஜிஸ்டரைப் பார்த்தால், இது நிஜம் என்பது நன்றாகத் தெரியும், நீங்கள் எல்லோரும் என்னை இப்படி உபத்திரவிப்பது சரியல்ல" என்றார். அந்தச் சமயத்தில், அந்தக் கும்பலில் இருந்த இன்னொருவர் எழுந்து நின்று, "கனவான்களே! பொறுங்கள் பொறுங்கள்; நான் சொல்வதையும் கேளுங்கள்; என் பெயர் தான் குண்டுராவ். நான் இந்த அண்ணாமலை முதலியார் வீட்டில் இத்தனை வருஷகாலம் வரையில் இரண்டு குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தது உண்மைதான். அந்தக் குழந்தைகள் வக்கீல் சிவஞான முதலியாரால் கொண்டு வந்து பங்காளிகளின் உபத்திரவத்துக்காக ஒளித்து வைத்திருக்கப்பட்ட குழந்தைகள் என்று அண்ணாமலை முதலியார்