பக்கம்:மதன கல்யாணி-3.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 விஷயத்திலும் பொய்யையே பேசி அறியாதவன் ஆதலால், அதை மறைக்கவும் கூடாமல், வெளியிடவும் கூடாமல் சிறிது நேரம் தவித்திருந்து, "ஒன்றுமில்லை; நான் கொஞ்ச நேரத்துக்கு முன், எழுந்து நீங்கள் இருந்த இடத்துக்கு வந்து நீங்கள் தூங்குகி றிர்களா என்று கவனித்தேன். நீங்கள் யாரிடத்திலோ கோபமாகப் பேசியதைக் கண்டு உங்களுக்குக் கோபமூட்டியது யார் என்பதை கவனித்தேன்; அதன் பிறகு நீங்கள் சொன்னதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன்; இந்த மூட்டையிலே தான் அந்த உடைகள் இருக்கின்றன. பெரியவருக்கு இவைகளை ரகசியமாகக் காட்டி, நான் இப்போது கேள்வியுற்ற விஷயங்களை எல்லாம் சொல்லி அவருடைய சந்தேகத்தையும் விலக்குவதற்காக இதைப் பத்திரப் படுத்துகிறேன்" என்றான். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் அந்தக் கடினமான விஷயத்தைத் தான் ருஜூப்படுத்த வேண்டிய துன்பமும் இழிவும் இல்லாமல், தெய்வத்தின் அருளால் எல்லாம் தானாகவே ஒழுக்குப் படுவதைக் கண்டு மிகுந்த சந்தோஷமும் இன்பமும் அடைந்து அந்த மூட்டையை வாங்கிப் பிரித்து, அதிலிருந்த ரவிக்கையை எடுத்து உடம்பில் போடமுயல, அதன் அளவு குறைவாகவே இருந்தமையால், உடம்பில் அதைப் போட முடியாமல் போய் விட்டது. தனது தாய், வாயால் சொல்லாமலே, தனக்கு அந்த விஷயத்தின் உண்மையை மெய்ப்பித்துக் காட்டுகிறாள் என்பதை உணர்ந்து அவன் மிகுந்த லஜ்ஜை அடைந்தவனாய்த் தவித்திருந்து கடைசியில் அம்மாள் உடைகளைக் கொடுக்க, வாங்கிப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு நிமிர்ந்தான். அப்போது, "அண்ணா! அண்ணா!" என்று மிகவும் பதைப் பாகவும் சந்தோஷமாகவும் குதுகலமாகவும் கோமளவல்லியம் மாள் அந்த அறைக்குள் ஒடி வந்தாள்; அவள் அவ்வாறு வந்ததைக் கண்ட மதனகோபாலனும், கல்யாணியம்மாளும் மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து, அவள் என்ன செய்தி சொல்லப் போகிறாளோ என்ற ஆவலோடு அவளது முகத்தையே நோக்கினர். மதனகோபாலன் மாத்திரம் அந்த அறையில் இருக்கிறாள் என எண்ணி அவ்வாறு குதுகலமாக ஓடிவந்த கோமளவல்லி தனது